Wednesday, 15 June 2016

ஆசிரியர் தகுதி தேர்வு : வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் சீனியாரிட்டி முறையில் பணி நியமனம் செய்ய கோரிக்கை கருணை காட்டுவாரா தமிழக முதல்வர்

ஆசிரியர் தகுதி தேர்வு : வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் சீனியாரிட்டி முறையில் பணி நியமனம் செய்ய கோரிக்கை கருணை காட்டுவாரா தமிழக முதல்வர்
கடந்த 2010ம் ஆண்டு மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின்படி ஆசிரியராக பணிபுரிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. இத்தேர்வானது கடந்த 2012 முதல் மூன்று தேர்வுகள் நடைபெற்றுள்ளது. 2012ல் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்பட்டது. 2013ல் நடந்த தேர்வில் தாள் 1 ல் சுமார் 12000 பேரும், தாள் 2ல் 16000ம் பேரும் 60 சதவிகித மதிப்பெண் பெற்று தேர்ச்;சி பெற்றனர். இதன்பின் தமிழக முதல்வர்சட்டசபையில் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு 55 சதவிகித மதிப்பெண் அதாவது 82 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.
இதனால் கூடுதலாக 44000 பேர் வெற்றி பெற்றனர். தொடக்க கல்வி மற்றும் பள்ளி கல்வி துறையில் சுமார் 15000 பணியிடங்களே உள்ளதால் நீதிமன்ற உத்தரவுபடி இடைநிலை ஆசிரியர்களுக்கு ப்ளஸ் 2, ஆசிரியர் பட்டய படிப்பு மற்றும் தகுதி தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்தும், பி.எட் பணியிடங்களுக்கு ப்ளஸ் 2, டிகிரி, பி.எட் மற்றும் தகுதி தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொண்டு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. கடந்த மாதம் தாள் 1, 2க்கான பணி நியமனத்துக்கான தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் இடம் பெறாத பெரும்பாலான ஆசிரியர்கள் விரக்தியில் உள்ளனர். அதற்கு காரணம் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று விட்டோம். இனி என்றாவது ஒருநாள் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தேர்வு பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு அடுத்த ஆசிரியர் பணி நியமனத்தின்போது முன்னுரிமை இல்லை என்று அறிவித்துள்ளதே என்கிறார்கள். மேலும் அவர்கள் கூறும்போது ப்ளஸ் 2, பட்டப்படிப்பு, ஆசிரியர் பட்டயபடிப்பு அல்லது பி.எட் இவற்றை பொறுத்தவரையில் எடுத்துள்ள மதிப்பெண்களை உயர்த்த வாய்ப்பில்லை. இப்படிப்புகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். 2000-01 கல்வியாண்டுக்கு முன் வரை ப்ளஸ் 2வில் 800 மார்க் எடுத்தாலே பெரிய விஷயம் என்ற நிலையிலிருந்து அடுத்து வந்த கல்வியாண்டுகளில் 1100க்கு மேல் சர்வ சாதாரணமாக எடுத்து வருகின்றனர். மேலும் கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய சுமார் 6 லட்சம் பேரில் 72 ஆயிரம் பேரை தவிர மற்றவர்கள் 82 மதிப்பெண்களுக்கும் குறைவாக எடுத்து தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தகுதி தேர்வு சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்றும் அறிவித்துள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வில் எங்களோடு தேர்வு எழுதி அரசு நிர்ணயித்துள்ள மதிப்பெண்களை எடுக்காதவர்கள் தான் அடுத்து நடைபெறும் தகுதி தேர்வு எழுத உள்ளனர். எனவே 2013ல் நடைபெற்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்கான பட்டியலில் இடம் பெறாத எங்களை முன்பு இருந்த வேலை வாய்ப்பு அலுவலக ஸ்டேட் சீனியாரிட்டி போல், வெயிட்டேஜ் அடிப்படையில் சீனியாரிட்டி அமைத்து வரும் காலங்களில் ஏற்படும் ஆசிரியர் பணி நியமனத்தில் இந்த சீனியாரிட்டி படி அனைவருக்கும் பணி வழங்கியும், அடுத்து வரும் டிஇடி தேர்வில் வெற்றி பெறுபவர்களை இதே சீனியாரிட்டியில் தொடர செய்தால் சிறப்பானதாக இருக்கும். அதற்கு தமிழக முதல்வர் அவர்கள் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5 சதவிகித சலுகை மதிப்பெண்ணை ரத்து செய்து தீர்ப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.


4 comments:

Ila king said...

கடந்த மாதம் தாள் 1, 2க்கான பணி நியமனத்துக்கான தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது...when it was published in which website... anyone tell me plz

Mahalakshmi M said...

List of names

s.venkata Chalam said...

I got 90 above Mark's In TET 2013 but no job. When will the TET case over?

s.venkata Chalam said...

I got 90 above Mark's In TET 2013 but no job. When will the TET case over?

TRB