Tuesday, 7 June 2016

ஐடிஐ படித்தவருக்கு இஸ்ரோவில் வேலை

ஐடிஐ படித்தவருக்கு இஸ்ரோவில் வேலை 
விண்வெளி ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு நிறுவனம்தான் இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம். தகவல் தொடர்பு, தொலைத்தொடர்பு, கடல்சார் பயன்பாடு, வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான செயற்கைக் கோள்களையும் அவற்றை விண்ணில் செலுத்துவதற்குப் பயன்படும் ராக்கெட்களையும் வடிவமைத்துத் தயாரித்துவருகிறது இந்நிறுவனம்.
யாருக்கு வாய்ப்பு? ஆண்டுதோறும் விஞ்ஞானிகளையும், இன்ஜினியர்களையும் தேர்வுசெய்து பணியமர்த்தி வருகிறது. அதேபோன்று டெக்னீஷியன்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளும் அவ்வப்போது நேரடி நியமன மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், தற்போது டெக்னீஷியன் (கிரேடு-பி) பணியில் 57 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. எலெக்ட்ரோ மெக்கானிக், எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம், மெக்கானிக், எலெக்ட்ரானிக் அப்ளிகேஷன், மெக்கானிக்கல் இன்டஸ்ட்ரியல் எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடப் பிரிவுகளில் மேற்கண்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதிக்கு ஏற்ற சம்பளம் மேலும், பிட்டர், எலெக்ட்ரிக்கல் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. எஸ்எஸ்எல்சி முடித்துவிட்டு சம்பந்தப்பட்ட பாடத்தில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்ப உதவியாளர் (மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ்) பணியில் 33 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் முதல் வகுப்பில் பொறியியல் டிப்ளமா பெற்றிருக்க வேண்டும். டெக்னீஷியன் பணிக்கு சம்பளம் ரூ.23 ஆயிரம் வரை, அதேபோல், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு ரூ.47,500 வரை கிடைக்கும். வயது வரம்பைப் பொறுத்தவரையில் 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. அனைத்துப் பணிகளுக்கும் முதலில் எழுத்துத் தேர்வும், அதைத் தொடர்ந்து திறன் தேர்வும் நடத்தப்படும். தகுதியுள்ள நபர்கள் ஜுன் மாதம் 17-ம் தேதிக்குள் இஸ்ரோ இணையதளத்தை (www.isro.gov.in) பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை இஸ்ரோ இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். வேலை வேண்டுமா?


No comments: