Monday, 13 June 2016

ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏழை குழந்தைகள் கல்விக்கு உதவ வேண்டும் நடிகர் சூர்யா வேண்டுகோள்
ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப் பெண்களை எடுத்த மாணவர் களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தனது ‘சிவகுமார் கல்வி அறக் கட்டளை’ மூலம் நடிகர் சிவகுமார் பரிசுகளை வழங்கி வருகிறார். இந்த ஆண்டுக்கான பரிசளிப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் 20 மாணவ, மாண விகளுக்கு தலா ரூ.10,000 பரிசாக வழங்கப்பட்டது. இவ்விழாவை தொடங்கி வைத்து பேசிய நடிகர் கார்த்தி, “இது எங்கள் குடும்ப விழா. ‘ நல்ல செயல்களை செய்’ என்று அப்பாவும் அம்மாவும் அறி வுரை மட்டும் கூறாமல், நல்ல காரியங்களில் எப்படி ஈடுபட வேண்டும் என்பதையும் எங்கள் முன் செய்து காட்டினார்கள். இங்கு பரிசு பெற்ற மாணவர்கள் நன்றாக படிப்பவர்கள். அவர்களிடம் ‘ நல்லா படிங்க’ என்று சொல்வதைவிட, அவர்களின் படிப்பை சமூகத்துக்கு நல்ல முறையில் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர் சிவகுமார் பேசும்போது, “33 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளைக்கு, அதற்குப் பிறகு அகரம் ஃபவுண் டேஷன் பொறுப்பேற்று சிறப் பாக கல்விப் பணி செய்து வருகிறது. நான் சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள் ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள். என்னைப் போல ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய் வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன்” என்றார். நடிகர் சூர்யா பேசும்போது, “மற்ற உதவிகளை விட கல்விக் காக ஒருவருக்கு செய்யும் உதவி காலத்துக்கும் பயன்படும். அதனால்‘சிவகுமார் கல்வி அறக் கட்டளையின்’ பணியையும் சேர்த்து கல்விப் பணியை நாங்கள் விரி வாக்கிக் கொண்டோம். அப்பா செய்த பணிகளிலிருந்து சில மடங்காவது அதிகமாக செய் தால்தான் அது வளர்ச்சி. அகரம் ஃபவுண்டேஷன் நம் சமூகத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த பணிகளைச் செய்து வருகிறது. உணவு, உடை,இருப்பிடம் ஆகிய மூன்று அடிப்படைத் தேவை களோடு கல்வியும் சேர்ந்துவிட்ட ஒரு காலகட்டத்தில் நாம் வாழ் கிறோம். அகரம் கல்வி அறக் கட்டளை, ‘விதை’ திட்டத்தின் கீழ் பண உதவி மட்டுமின்றி மாண வர்கள், நம் சமூகத்தை தன்னம் பிகையோடு எதிர்கொள்ளத் தேவையான பல்வேறு பயிற்சி களையும் வழங்கி வருகிறது. ஏழை மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை, ஒருங்கிணைக்க அகரம் முயற்சி எடுத்து வருகிறது. ஏழை குழந்தைகளின் கல்விக் காக ஒவ்வொருவரும் தங்க ளால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்” என்றார்.


No comments: