Wednesday, 8 June 2016

நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆராய்ந்து, தரவரிசைப் பட்டியல் வெளியிட மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அனைத்து பள்ளிகளுக்கும் தரவரிசைப் பட்டியல் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு 
நாட்டில் உள்ள அனைத்து பள்ளி களையும் ஆராய்ந்து, தரவரிசைப் பட்டியல் வெளியிட மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான யோசனையை இத்துறையின் அமைச்சரான ஸ்மிருதி இரானியிடன் அவரது உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை ஏற்றுக்கொண்ட ஸ்மிருதி இரானி, பள்ளிகளுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடும் பணியை இந்த ஆண்டே தொடங்க உத்தர விட்டுள்ளார்.
எனவே இந்த ஆண்டு சுமார் 10 சதவீத பள்ளிகள், அதாவது மத்திய அரசு பள்ளிகளுக்கு மட்டும் தரவரிசைப் பட்டியல் வெளியாக உள்ளது. இதனை படிப்படியாக தனியார் மற்றும் மாநில அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இந்த வகையில் வரும் 2019-ம் ஆண்டுக்குள் 50 சதவீத பள்ளிகளை தரவரிசைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2009-ல் குஜராத் முதல்வராக இருந்தபோது, பள்ளி மாணவர்களுக்காக ஒரு திட்டம் அமல்படுத்தி இருந்தார். அதில் ஒவ்வொரு மாணவரின் கற்றல் திறனை ஆராய்ந்து, அடுத்த வகுப்புகளில் அதை வலுவாக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. 3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான இத்திட்டத்தில், இதை செயல்படுத்திய பள்ளிகளும் தரவரிசைப்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தற்போது நாடு முழுவதிலும் தரவரிசைப்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது” என்றனர். பள்ளிகளை தரவரிசைப்படுத் தும் திட்டம் குறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கல்வி நிபுணர்களிடம் கருத்து கேட் கப்பட்டது. இதற்கு நாடு முழு வதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அடிப்படை தேவைகளில் சுமார் 25 சதவீதம் குறைபாடுகள் இருப்பதாக அவர் கள் கூறியுள்ளனர். இத்துடன் அரசுப் பள்ளிகளில் 25 சதவீத ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், இதுபோன்ற பிரச்சினைகளுடன் எந்தவொரு பள்ளியையும் தரவரிசைப்படுத்த முடியாது என்றும் கல்வி நிபுணர் கள் தெரிவித்துள்ளனர். இதனால் குறைபாடுகளை முதலில் களை வது மிகவும் அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். நம் நாடு மற்றும் சர்வதேச அளவிலான பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங் களின் தரவரிசைப் பட்டியலை பல்வேறு தனியார் மற்றும் ஊடக நிறுவனங்கள் இதுவரையும் வெளி யிட்டு வந்தன. இவற்றில் பல பட்டி யல் ஒருதலைப்பட்சமாக வெளி யிடப்படுவதாக புகார் எழுந்தது. இதனால் முதன்முறையாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கடந்த ஏப்ரலில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங் கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து நாட்டின் அனைத்து பல் கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி களின் தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு இந்தப் பட்டியல் மிகவும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த வரிசையில் பள்ளிகளுக்கும் தரவரிசைப் பட்டியல் வெளியிடும் யோசனை அதிகாரிகளுக்கு தோன்றியுள்ளது.


No comments: