Wednesday, 8 June 2016

இஎஸ்ஐ கழகத்தில் மேலாளர் பணியிடங்கள் காத்திருக்கு...!!

இஎஸ்ஐ கழகத்தில் மேலாளர் பணியிடங்கள் காத்திருக்கு...!!
டெல்லியிலுள்ள இஎஸ்ஐ கழகத்தில் (இஎஸ்ஐசி) ஐடி மேலாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றந. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு வாக்-இன்-இன்டர்வியூவில் பங்கேற்கலாம். இஎஸ்ஐ-யில் 34 ஐடி மேலாளர், உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளனர். இங்கு ஐடி (தகவல் தொழில்நுட்பம்) மேலாளர் பணியிடங்கள் 12-ம், உதவியாளர் பணியிடங்கள் 22-ம் காலியாகவுள்ளன.
விருப்பமுள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் பங்கேற்கலாம். ஐடி மேலாளர் பணியிடங்களுக்கு பி.இ., அல்லது பி.டெக் படித்து முடித்திருக்கவேண்டும். மேலும் 6 முதல் 8 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் இருக்கவேண்டும். ஐடி உதவியாளர் பணியிடங்களுக்கு பிசிஏ அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி-யில் டிப்ளமோ படித்து முடித்திருக்கவேண்டும். ஐடி மேலாளர் பணியிடங்களுக்கு ரூ.50 ஆயிரமும், ஐடி உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ.22 ஆயிரமும் ஊதியம் வழங்கப்படும். கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://esic.nic.in/index.php என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம். இந்தப் பணியிடங்களுக்கான வாக்-இன்-இன்டர்வியூ டெல்லியில் ஜூன் 13, 14-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.


No comments: