Friday, 10 June 2016

பட்ட மேற்படிப்பு படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க இயலாது தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக அதிகாரி பேட்டி

பட்ட மேற்படிப்பு படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க இயலாது தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக அதிகாரி பேட்டி
பட்ட மேற்படிப்பு படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க இயலாது தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக அதிகாரி பேட்டி மருத்துவ பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க இயலாது என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக அதிகாரி கூறினார். மருத்துவ பட்டமேற்படிப்பு தேர்வு முடிவு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ பட்ட மேற்படிப்பு (பட்டபடிப்பு மற்றும் டிப்ளமோ) படித்த மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
தேர்வில் நிறைய பேர் தோல்வி அடைந்ததாகவும் அவ்வாறு தோல்வி அடைந்தவர்களில் பலர் ஒவ்வொரு பாடத்திலும் தலா 40 சதவீதம் பெற்றுள்ளனர். ஆனால் மொத்தத்தில் 50 சதவீத மதிப்பெண் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து சில மாணவர்கள் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் பரமேஸ்வரியை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் கூறியதாவது:- விதிமுறைப்படிதான் பல்கலைக்கழகம் இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படிதான் பல்கலைக்கழகம் நடைபெற்று வருகிறது. 2013-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு மாணவரும் செய்முறைத்தேர்விலும், எழுத்து தேர்விலும் தேர்ச்சி பெறவேண்டும். இந்த இரு தேர்வில் ஏதாவது ஒரு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் இரண்டு தேர்வையும் மீண்டும் எழுதவேண்டும். சமீபத்தில் நடந்த மருத்துவ பட்டமேற்படிப்பு தேர்வில் நிறையபேர் தோல்வி அடைந்ததாக மாணவர்கள் கூறுகிறார்கள். உண்மை நிலைஅப்படி அல்ல. தேர்ச்சி சதவீதம் கடந்த 5 வருடமாக தேர்ச்சி விகிதம் 90 முதல் 94 சதவீதமாக உள்ளது. கருணை மதிப்பெண் போட இயலாது மாணவர்கள் கருணை மதிப்பெண் கேட்கிறார்கள். அவ்வாறு மதிப்பெண் போட்டு தேர்ச்சி பெறவைக்க முடியாது. மேலும் கருணை மதிப்பெண் போட இயலாது. மறுமதிப்பீட்டில் 3 அல்லது 4 மதிப்பெண் போட தீர்மானிக்க இயலாது. வெளியிட்ட முடிவை மாற்றி அமைக்கவும் இயலாது. இவ்வாறு டாக்டர் பரமேஸ்வரி தெரிவித்தார். சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் சுகந்த், விக்னேஷ், பக்ருதீன் ஆகியோர் கூறியதாவது:- தேர்வை தள்ளிப்போடவில்லை சமீபத்தில் வெளியிடப்பட்ட மருத்துவ பட்ட மேற்படிப்பு முடிவில் நிறைய மாணவர்கள் தோல்வி அடைந்தனர். அவர்களில் அரசு ஆஸ்பத்திரியில் படிக்கும் மாணவர்களும் 100-க்கும் மேற்பட்டவர்கள். அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்போடு சேவை செய்தனர். அதனால் அவர்களால் தேர்வுக்கு படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மழையின் காரணமாக தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை விடுத்தோம். ஆனால் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. மறுமதிப்பீடு செய்யவில்லை 4 தாள்களில் சேர்த்து 400-க்கு 200 மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி. ஆனால் அவ்வாறு 200 மதிப்பெண் பெறாதவர்களுக்கு மறுமதிப்பீடு செய்யவில்லை. அதனால்தான் தோல்விக்கு முக்கிய காரணம். எனவே தோல்வி அடைந்த அனைவரின் 4 தேர்வின் விடைத்தாள்களையும் பல்கலைக்கழக விதிமுறையின் படி மறுமதிப்பீடு செய்யவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 13-ந்தேதி சென்னையில் டாக்டர்களும் மருத்துவ மாணவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


No comments:

TRB