Monday, 13 June 2016

சட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம்: இன்று (JUNE 13 )முதல் துவங்குகிறது

சட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம்: இன்று (JUNE 13 )முதல் துவங்குகிறது
சட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவ மாணவியர்களுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று முதல் துவங்குகிறது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் சட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு, 5 ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி படிப்புகளில் மாணவர்கள் சேர 1052 இடங்களும், 3 ஆண்டு படிப்புகளுக்கு 1262 இடங்களும் உள்ளன. 5 ஆண்டு படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 3 ஆண்டு படிப்புகளுக்கு எதாவது ஒரு பட்ட படிப்பு முடித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை பெற எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.250, மற்ற பிரிவினர் ரூ.500யை சட்டக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in என்ற இணையத்தளத்திலோ பதிவிறக்கம் செய்த செல்லானை இந்தியன் வங்கியின் கிளைகளில் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, எடுக்கப்பட்ட செல்லானின் நகலை அளித்து விண்ணப்பங்களை பெற்று செல்லலாம். இந்தநிலையில், 5 ஆண்டு மற்றும் 3 ஆண்டு படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று முதல் துவங்குகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க 5 ஆண்டு படிப்புகளுக்கு இம்மாதம் 30ம் தேதியும், 3 ஆண்டு படிப்புகளுக்கு ஜூலை மாதம் 15ம் தேதியும் கடைசி நாளாகும். சென்னையில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்திலும் விண்ணப்பம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

TRB