Tuesday, 7 June 2016

MBBS RANK 2016 | எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 24 ஆயிரத்து 100 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தரவரிசைப் பட்டியல் வரும் 17-ம் தேதி வெளியிடப்படும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் செல்வராஜன் தெரிவித்தார்.

17-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியீடு மருத்துவ படிப்புக்கு 24,100 விண்ணப்பங்கள் விற்பனை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள் 
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 24 ஆயிரத்து 100 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தரவரிசைப் பட்டியல் வரும் 17-ம் தேதி வெளியிடப்படும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் செல்வராஜன் தெரிவித்தார்.
தமிழகத்தில் 20 அரசு மருத் துவக் கல்லூரிகளில் 2,650 எம்பிபிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 397 இடங்கள் (15 சதவீதம்) போக மீதமுள்ள 2,253 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. தமிழக அரசு ஏற்று நடத்தும் கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் போக, மீதமுள்ள 85 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இவற்றில் 20 இடங்களை இஎஸ்ஐ பணியாளர்களின் குழந்தைகளுக்கு தமிழக அரசு ஒதுக்குகிறது. கே.கே.நகர் இஎஸ்ஐ மருத் துவக் கல்லூரியில் உள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் மற்றும் இஎஸ்ஐ பணியாளர்களின் குழந்தைகளுக்கு 20 இடங்கள் போக மீதமுள்ள 65 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. சென்னை யில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் போக, மீதமுள்ள 85 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ளன. 6 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 760 எம்பிபிஎஸ் இடங்களில் மாநில அரசுக்கு 470 இடங்கள் உள்ளன. 17 தனியார் (சுயநிதி) பல் மருத் துவக் கல்லூரிகளில் உள்ள 1,610 பிடிஎஸ் இடங்களில் 970 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இந்நிலையில் 2016-17-ம் கல்வி ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் 26-ம் தேதி அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தொடங்கியது. ஜூன் 6-ம் தேதி (நேற்று) மாலை 5 மணியுடன் விண் ணப்ப விநியோகம் முடிவடைந்தது. இது தொடர்பாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு செய லாளர் செல்வராஜன் கூறும்போது, “தமிழகம் முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 24,100 விண்ணப்பங்கள் விற்பனையாகி யுள்ளன. சென்னையில் மட்டும் 6,811 விண்ணப்பங்கள் விற்பனை யாகியுள்ளன. இணையதளம் மூலமாக 2,700 விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. பூர்த்திசெய்யப்பட்ட விண் ணப்பங்கள் நேரிலோ தபால் மூலமாகவோ ஜூன் 7-ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில் மருத்துவக் கல்வி இயக்ககம், செயலாளர், தேர்வுக்குழு, 162, பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை, கீழ்ப்பாக் கம், சென்னை-600010 என்ற முக வரிக்கு அனுப்ப வேண்டும். இதுவரை 20,829 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான தர வரிசைப் பட்டியல் ஜூன் 17-ம் தேதி வெளியிடப்படும். முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 20-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 18-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார். 5 இடங்கள் குறைந்தது மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு 155 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்நிலையில் எம்சிஐ அதிகாரிகள் குழு ஆய்வு செய்து, இந்த ஆண்டு 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கொடுத்தனர். இதனால் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 5 எம்பிபிஎஸ் இடங்கள் குறைந்தன. முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 20-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 18-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது


No comments: