Thursday, 30 June 2016

results.unom.ac.in | சென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (ஜூன் 30) வெளியீடு.

results.unom.ac.in | சென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (ஜூன் 30) வெளியீடு.
சென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (ஜூன் 30) வெளியிடப்பட உள்ளன.2016 ஏப்ரலில் நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான இந்தத் தேர்வு முடிவுகளை result.unom.ac.in, www.ideunom.ac.in, http:egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
மறுமதிப்பீடு: தேர்வு மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஜூலை 1-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை பல்கலைக்கழக இணையதளத்தில் ஆன்-லைனில் பதிவு செய்து, அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ரூ. 1,000-க்கான வங்கி வரைவோலையை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மறுகூட்டல்:அதுபோல, மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களும், ஆன்-லைனில் பதிவு செய்த விண்ணப்பத்துடன் ரூ. 300-க்கான வங்கி வரைவோலையை இணைத்து ஜூலை 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை 23-இல் உடனடித் தேர்வு:இளநிலை பட்டப் படிப்பில் 5-ஆவது பருவத் தேர்வு வரை அனைத்துப் பாடங்களில் தேர்ச்சி பெற்று, 6-ஆவது பருவத் தேர்வில் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியுற்றவர்கள் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.அதுபோல முதுநிலை பட்டப் படிப்பில் 3-ஆவது பருவத் தேர்வுவரை அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று, 4-ஆவது பருவத் தேர்வில் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியடைந்தவர்களும் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தொழில் படிப்பு மாணவர்களும் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களைச்சமர்பிக்கவும் ஜூலை 8 கடைசித் தேதியாகும்.இந்த உடனடித் தேர்வு சென்னையில் மூன்று மையங்களில் ஜூலை23-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்வறை அனுமதிச் சீட்டை ஜூலை 18-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


No comments:

TRB