Wednesday, 8 June 2016

SSLC PRACTICAL 2017 | 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-வது வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்துக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

10-வது வகுப்பு தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சிக்கு செல்லவேண்டும் அரசு தேர்வுகள் இயக்குனர் அறிக்கை 
2017-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-வது வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்களும் ஏற்கனவே 2012-ம் வருடத்திற்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும் மற்றும் புதிய பாடத் திட்டத்தில் அறிவியல் செய்முறைப்பயிற்சி வகுப்பிற்கு இந்நாள்வரை பெயர் பதிவு செய்யாத தனித் தேர்வர்களும் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்துக்கொள்ளலாம்.
அனைத்து தனித் தேர்வர்களும் இன்று (புதன்கிழமை) முதல் 30-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். மாவட்டக்கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்பில் 80 சதவீதம் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். செய்முறைப் பயிற்சி பெற்ற தேர்வர்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரை தொடர்புக்கொண்டு செய்முறைத் தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விவரம் அறிந்து செய்முறைத் தேர்வினை தவறாமல் எழுதிட வேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


No comments: