Thursday, 9 June 2016

TNPSC GROUP 2 A தேர்வு முடிவுகள் வெளியீடு

www.tnpsc.gov.in | TNPSC :குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.
TNPSC GROUP 2 A  RESULT

www.tnpsc.gov.in | TNPSC :குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு தமிழக அரசுத்துறையில், குரூப் 2 ஏ பிரிவில், நேர்முக எழுத்தர், உதவியாளர், திட்ட இளநிலை உதவியாளர், கீழ்நிலை எழுத்தர் மற்றும் இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பதவிகளுக்கு, 1,676 காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி., சார்பில் ஜனவரி, 24ல் நடந்த தேர்வில்,6.54 லட்சம் பேர் பங்கேற்றனர். அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தேர்வர்களின் மதிப்பெண், தரவரிசை ஆகியவை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:தேர்வர்கள் தங்களின் பொது தரவரிசை, சமூகரீதியான தரவரிசை மற்றும் சிறப்பு பிரிவு தரவரிசை ஆகியவற்றை, தங்களின் பதிவு எண் மூலம் அறியலாம். இணையவழி விண்ணப்பத்தில், தேர்வர்கள் குறிப்பிட்ட வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்பக்கல்வி தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள், ஜூலை 4ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அவர்களின் தரவரிசை, காலியிடம் மற்றும் இடஒதுக்கீட்டு விதியின்படி, கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 24.01.2016 மு.ப. அன்று ஒருங்கிணைந்த குடிமைப் பணி-II (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) (Group-II A Services)ல் அடங்கிய நேர்முக எழுத்தர், உதவியாளர், திட்ட இளநிலை உதவியாளர், கீழ்நிலை எழுத்தர் மற்றும் இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் ஆகிய பதவிகளுக்கான 1676 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வை நடத்தியது. அதில் பங்குபெற்ற 6,54,322 விண்ணப்பதாரர்களில் 6,48,595 நபர்களின் மதிப்பெண், தரவரிசை நிலை (Mark & Rank Position) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை (Overall Rank), வகுப்பு வாரியான தரவரிசை நிலையும் (Communal category wise Rank), சிறப்புப் பிரிவு (Special Category) விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலையும் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை ஆகியவற்றைத் தங்களது பதிவு எண்ணை (Register Number) உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்பக்கல்வி தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் 04.07.2016 முதல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அவர்களின் தரவரிசை நிலை (Ranking Position), காலியிட நிலை (Vacancy Position) மற்றும் இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு பின்னர் அழைக்கப்படுவர். கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்படும். மேற்படி தேர்வில் கலந்துகொண்டு, இப்பதவிக்கான அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறாதவர்களின் மதிப்பெண்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வெ. ஷோபனா, இ.ஆ.ப., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Written Examination for the 1676 vacancies in the posts of Personal Clerk, Assistant, Planning Junior Assistant, Lower Division Clerk and Junior Co-operative Auditor included in Combined Civil Services Examination-II (Non-Interview Posts) (Group-II A Services) was held on 24.01.2016 FN conducted by the Tamil Nadu Public Service Commission. Out of 6,54,322 candidates appeared in the written examination, the Marks and Rank Position of the 6,48,595 Candidates is hosted in the Commission’s Website “www.tnpsc.gov.in”. The Overall Rank, Communal category wise Rank and Special Category Rank of the candidates are also hosted. The candidates may get their Marks and Rank by entering their Register Number. The Ranking List has been arrived based on the claims relating to age, educational qualification, technical qualification, Communal category, special category status etc. made by the candidates in their online applications. If any of their claims are found to be false or incorrect at the time of Certificate Verification, their candidature will be cancelled and they will not be permitted to attend the counselling. The Candidates will be called for Certificate Verification from 04.07.2016 onwards. Later, they will be called for Counselling according to their ranking position, vacancy position and rule of reservations of appointment. The details regarding the date of Counselling will be hosted in the Commission’s website (www.tnpsc.gov.in) soon. The marks of the candidates who have not acquired the qualifying marks is also hosted in the Commission’s website. V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS


1 comment:

Bala Murugan said...

any one know what is first mark of rank one position. and how to i know who are all short listed in Group 2A