Monday, 6 June 2016

TNPSC Group IV 481 விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதம் | எழுத்துத் தேர்வு நடைபெற்ற நாள் 21.12.2014 | சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்வரும் 15.06.2016 முதல் 17.06.2016 வரை சென்னை பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு 
The Tamil Nadu Public Service Commission in its notification dated 14.10.2014 had invited applications from eligible candidates for appointment by direct recruitment to the post of Typist included in Group IV Services 2013-14 and 2014-15. The Written examination for the post was held on 21.12.2014. A total no. of 481 candidates have been called for the II Phase of Certificate Verification to verify and confirm the genuineness of the claims made by them in their on-line applications to fill up 314 vacancies.
The II Phase of Certificate Verification is scheduled to be held in the office of the Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, V.O.C. Nagar, Chennai-3 from 15.06.2016 to 17.06.2016. The memorandum for Certificate Verification has been sent to all the 481 candidates through Speed Post. The certificate verification schedule has already been hosted in Commission’s Website (i.e. www.tnpsc.gov.in). Consideration of the candidates for Certificate Verification cannot be construed as clearance for further selection process. If the candidates fail to appear for the Certificate Verification on the designated date and time, they will not be given any further chance to appear for the Certificate Verification. 2013-14 மற்றும் 2014-15 -ஆம் ஆண்டிற்கான தொகுதி நான்கில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 14.10.2014 ஆம் நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. மேற்காணும் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 21.12.2014 அன்று நடைபெற்றது. மேற்படி பதவிக்கான விண்ணப்பதாரர்களின் இணையதள வழியிலான விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்க்கும் பொருட்டும், அவ்விவரங்களின் உண்மைத் தன்மையினை அறியும் பொருட்டும் 314 காலிப் பணியிடங்களுக்கு இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்வரும் 15.06.2016 முதல் 17.06.2016 வரை சென்னை பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 481 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விரைவு அஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்த்தலுக்கான அட்டவணை (Certificate Verification Schedule) தேர்வாணைய இணையதளத்தில் (i.e.www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டதாலேயே அவர்கள் அதனைத் தொடர்ந்த தெரிவுப் பணிகளுக்கு தகுதி பெற்றுவிட்டதாக கருத இயலாது. மேலும், குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு கலந்துக் கொள்ளத் தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது. 


No comments:

TRB