Saturday, 11 June 2016

www.airmenselection.gov.in | விமானப்படையில் இசைக்கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு | வரும் 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நேரடி தேர்வு மூலம் நடைபெற உள்ளது.

விமானப்படையில் இசைக்கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு 
இந்திய விமானப் படையில் இசைக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள காக்கநாடு வாயு சேனா சாலையில் அமைந்துள்ள விமானப்படை தேர்வு மையத்தில் வரும் 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நேரடி தேர்வு மூலம் நடைபெற உள்ளது.
விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப் பதுடன் புல்லாங்குழல், சாக்ச போன், கிளாரினெட், கிட்டார், வயலின், தபேலா, பியானோ உள்ளிட்ட ஏதாவது ஒரு வாத்தி யத்தை இசைக்கும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்த கூடுதல் தகவல்கள் அறிய www.airmenselection.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். அல்லது 044-22390561 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


No comments: