Wednesday, 22 June 2016

www.gct.ac.in- எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புக்கு 4-ந் தேதி முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் 4-ந் தேதி முதல் பதிவு செய்யலாம்- எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புக்கு 4-ந் தேதி முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம். 2016-2017-ம் கல்வி ஆண்டுக்கு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி, கலைக் கல்லூரிகள், அண்ணாபல்கலைக்கழகம், துறைகள், வட்டாரமையங்கள், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் (எம்.பி.ஏ. மட்டும்), சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சென்னை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரி கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டில் இயங்கும் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் இணையதள மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். www.gct.ac.in  என்ற இணையதள வாயிலாக விண்ணப்பித்தல் வேண்டும். விண்ணப்பதாரர் தேவையான சான்றுகளுடன் நேரிடையாக ஆன்-லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த பின்பு அதை பிரதி எடுத்து உரிய ஆவணங்கள் மற்றும் பதிவு கட்டணத்துடன் அனுப்பிவைத்தல் வேண்டும். இணையதள மூலமாக விண்ணப்பங்களை ஜூலை 4-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதி வரை பதிவு செய்யலாம். கடைசி நாள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் பதிவு கட்டணத்துடன் செயலாளர், தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மாணவர் சேர்க்கை-2016, அரசினர் பொறியியல் கல்லூரி, கோவை-13 என்ற முகவரிக்கு ஜூலை 15-ந் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும். இந்த தகவலை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனர் சோ.மதுமதி தெரிவித்துள்ளார்.



No comments: