Thursday, 9 June 2016

www.sdat.tn.gov.in | விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு விடுதிகளில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை .
விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது: விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறையின் மூலமாக பள்ளி களில் படிக்கும் மாணவ, மாணவி களுக்கு விளையாட்டுத் துறை யில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 28 விளையாட்டு விடுதி கள் இயங்கி வருகின்றன.
இந்த விடுதிகளில் 2016 - 17ம் ஆண்டுக் கான மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தேசிய அளவிலான போட்டி களில் பதக்கம் வென்றவர்கள். தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டவர்கள். மாநில அளவிலான போட்டியில் முதல் 3 இடங்களில் பதக்கம் பெற்றவர் கள், மாநில அளவிலான போட்டி களில் கலந்துகொண்டவர்கள் மற்றும் தகுதி வாய்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு விளை யாட்டு விடுதிக்கான இரண்டாம் கட்ட மாநில அளவிலான தேர்வுகள் வரும் 17, 18 மற்றும் 19-ம் தேதிகளில் சென்னை நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. நேரு விளையாட்டு அரங்கத் தில் தடகளம், கூடைப்பந்து, பாட்மிண்டன், குத்துச்சண்டை, கால்பந்து, கத்திச்சண்டை, ஜிம் னாஸ்டிக்ஸ், டேபிள் டென் னிஸ், டென்னிஸ், ஜூடோ மற்றும் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கபடி, கைப்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், கையுந்துபந்து, பளுதூக்குதல் விளையாட்டு களுக்கு தேர்வு நடைபெறுகிறது. 17-ம் தேதி 7, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும், 18-ம் தேதி 11-ம் வகுப்பு மாணவர் களுக்கும், 19-ம் தேதி 11-ம் வகுப்பு மாணவிகளுக்கும் காலை 8 மணி முதல் தேர்வு நடைபெறும் மாணவ, மாணவிகள் விண்ணப்பத்தை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள லாம். பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பம் மற்றும் விளையாட்டில் பங்கேற்ற அசல் சான்றுகளுடன் குறிப்பிட்ட தேதிகளில் காலை 8.00 மணி அளவில் உரிய மையங் களுக்கு நேரில் வர வேண்டும். இவ்வாறு பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.


No comments:

TRB