Friday, 10 June 2016

www.skilltraining.tn.gov.in | ஐ.டி.ஐ.க்களில் மாணவர் சேர்க்கை: ஆன்லைனில் விண்ணப்பக்கலாம்

ஐ.டி.ஐ.க்களில் மாணவர் சேர்க்கை: ஆன்லைனில் விண்ணப்பக்கலாம்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) மாணவர்கள் சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.நிகழாண்டில் வட சென்னை, ஆர்.கே.நகர், கிண்டி, கிண்டி (மகளிர்), திருவான்மியூர் ஆகிய இடங்களில் உள்ள ஐ.டி.ஐ.க்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இங்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உதவித் தொகை, விலையில்லா சீருடைகள், காலணிகள், மிதிவண்டி, மடிக்கணினி, பாடப் புத்தகங்கள், கட்டணமில்லா பேருந்து பயண அட்டை ஆகியன வழங்கப்படுகின்றன. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை ஐ.டி.ஐ.க்களில் நேரடியாக அணுகலாம். இணையதளத்திலும் பார்வையிடலாம். இதுதவிர, இணையதளத்தில் விண்ணப்பத்தினை இலவசமாகப் பதிவேற்றம் செய்து அனைத்து அசல் சான்றிதழ்களுடன் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகிப் பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


No comments:

TRB