Friday, 10 June 2016

www.textbookcorp.in | இ-சேவை மையங்கள் மூலம் பாட புத்தகங்களை 48 மணி நேரத்தில் பெறும் வசதி தமிழக அரசு ஏற்பாடு

இ-சேவை மையங்கள் மூலம் பாட புத்தகங்களை 48 மணி நேரத்தில் பெறும் வசதி தமிழக அரசு ஏற்பாடு .
இ-சேவை மையங்கள் மூலம் பாட புத்தகங்களை 48 மணி நேரத்தில் பெறும் வசதி தமிழக அரசு ஏற்பாடு தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2016-17 கல்வி ஆண்டுக்கான பாடநூல்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து பள்ளிகள் மொத்தமாக கொள்முதல் செய்து விநியோகிக்கின்றன. மாணவர்களும் தங்களுக்கு தேவைப்படும் 2016-17 கல்வியாண்டுக்கான 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடநூல்களை www.textbookcorp.in இணையதளம் மூலம் பதிவு செய்து பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர பாடநூல்களை எளிதில் வாங்கிடும் வகையில் மாநிலத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உள்ள 269 இ-சேவை மையங்களிலும் தேவைப்படும் பாடநூல்களுக்கான தொகையை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். மேற்படி பாடநூல்கள் 48 மணி நேரத்துக்குள் அவர்களது இல்லத்துக்கு கூரியர் சேவை மூலம் வந்துசேரும். இ-சேவை மையங்களின் விலாச விவரங்கள், பாடநூல் விலைவிவரங்களை www.textbookcorp.in என்ற இணையதளத்திலிருந்து தெரிந்துக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. 


No comments: