Friday, 17 June 2016

www.tnhealth.org | எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - 3 பேர் முதலிடம்

mbbs rank list 2016 | எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - 3 பேர் முதலிடம்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 17) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். மருத்துவப்படிப்பு தரவரிசைப்பட்டியலில் 3 பேர் முதலிடத்தைப்பிடித்துள்ளனர். கன்னியாகுமரி - ஆதித்யா மகேஸ், திருவள்ளூர் - கனகவேல், திருவையாறு - விக்னேஷ் ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, முதல் கட்ட கலந்தாய்வு வருகிற 20-ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2,318, தனியார் கல்லூரிகளில் 535 இடங்கள் என மொத்தம் 2,853 இடங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்ப விநியோகம் மே 26-ஆம் தேதி முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான விண்ணப்பங்களை 21,913 பேர் நேரடியாகவும், இணையதளத்தில் இருந்து 4,104 பேர் பதிவிறக்கம் செய்தும் என மொத்தம் 26,017 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவற்றில் ஒருமுறைக்கு மேல் விண்ணப்பித்த 203 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, மீதம் உள்ள 25,814 பேருக்கான சமவாய்ப்பு எண் கடந்த திங்கள்கிழமை (ஜூன் 13) வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்களுக்கான சமவாய்ப்பு எண்ணை www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்கள் விண்ணப்ப எண்களை பதிவு செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். சமவாய்ப்பு எண் வழங்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலிக்கும் பணிகள் நிறைவடைந்தன. இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். இந்த காரணிகள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். நிராகரிக்கப்பட்ட பட்ட விண்ணப்பங்கள் தவிர்த்து, மீதம் உள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் வெளியிடப்பட உள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதையடுத்து, முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதி தொடங்க உள்ளது.
 



No comments:

TRB