Friday, 8 July 2016

அரசுப்பணியாளர்களுக்கு கூடுதல் பயன்களுடன் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மேலும் 4 ஆண்டு காலத்துக்கு செயல்படுத்தமுதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். மாத சந்தா ரூ.180 ஆக நிர்ணயம்

அரசு ஊழியர்களின் காப்பீடு திட்டம் நீட்டிப்பு.அரசு ஊழியர்களின் மாத சந்தா ரூ.180 ஆக நிர்ணயம்

தமிழக அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், திட்டம் ஜூனில் முடிந்ததால் சில பயன்களுடன் காப்பீடு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் 2020 ஜூன் 30 வரை திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய், உறுப்பு மாற்று சிகிச்சை நிதி ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 40 சதவீத குறைபாடுகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வயதுவரம்பின்றி சலுகை வழங்கப்பட்டுள்ளது. காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களின் மாத சந்தா ரூ.180 ஆக நிர்ணயம். அரசு பணியாளர்கள் குடும்பத்துக்கான மருத்துவ காப்பீட்டு தொகை ரூ. 4 லட்சமாக தொடரும். இந்த திட்டத்தால் 10.22 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என முதல்வர் கூறியுள்ளார்.தமிழக அரசுப்பணியாளர்களுக்கு கூடுதல் பயன்களுடன் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் மேலும் 4 ஆண்டுகளுக்கு செயல்படுத்த ஜெயலலிதா உத்தரவு அரசுப்பணியாளர்களுக்கு கூடுதல் பயன்களுடன் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மேலும் 4 ஆண்டு காலத்துக்கு செயல்படுத்தமுதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். ஜெயலலிதா சென்னை, ஜூலை.8- தமிழக அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- மருத்துவ காப்பீட்டு திட்டம் 2012-ம் ஆண்டில் இருந்து நான்கு ஆண்டு காலத்திற்கு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் அரசுப் பணியாளர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வந்த மருத்துவ காப்பீட்டு திட்டம், 30.6.16ல் முடிவடைந்தது. எனவே, 1.7.16 முதல் நான்கு ஆண்டுகளுக்கு அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சில கூடுதல் பயன்களுடன் செயல் படுத்திட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், திறந்த ஒப்பந்தப் புள்ளி முறையைப் பின்பற்றி, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, ஒப்பந்தப் புள்ளியை ஏற்கும் குழு, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தை தெரிவு செய்து உள்ளது. ஜெயலலிதா உத்தரவு அதன் அடிப்படையில் 1.7.16 முதல் 30.6.20 வரையிலான காலத்திற்கு அரசுப் பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அரசுப் பணியாளர்களுக்கு தற்போது நடை முறையில் உள்ள காப்பீட்டு திட்டத்தை விட இந்த புதிய காப்பீட்டு திட்டம் சில கூடுதல் பயன்களுக்கு வகை செய்துள்ளது. ரூ.7½ லட்சமாக உயர்வு இந்த புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு அரசுப் பணியாளர் குடும்பத்திற்கு அனுமதிக்கப்படும் மருத்துவ காப்பீட்டு தொகை 4 லட்சம் ரூபாய் என தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், புற்று நோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படும் நிதியுதவியானது 7½ லட்சம் ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியரை முழுவதும் சார்ந்துள்ள, குறைந்தபட்சம் 40 சதவீத குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகள், எவ்வித வயது வரம்புமின்றி இத்திட்டத்தில் பயன்பெற வகை செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தினர் விபத்து காரணமாக இத்திட்டத்தின் கீழ் ஒப்புதலளிக்கப்பட்ட சிகிச்சைகளை அவசர சிகிச்சையாக அங்கீ கரிக்கப்படாத மருத்துவமனையில் மேற்கொண்டிருந்தால், பணியாளர் பயன்பெறவும் இத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அரசு துறை, உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசு பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றின் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் நான்கு ஆண்டுகளுக்கு மருத்துவ காப்பீட்டு பலன் களை பெற முடியும். 10.22 லட்சம் பேருக்கு பயன் இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு அரசுப் பணியாளர்கள் சந்தா தொகையாக மாதம் 180 ரூபாய் செலுத்த வேண்டும். அரசு தனது பங்காக மொத்தம் 17 கோடியே 90 லட்சம் ரூபாயை ஆண்டு தோறும் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கும். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 10.22 லட்சம் அரசுப் பணியாளர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பயன் பெறுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.


No comments: