Sunday, 3 July 2016

ரேங்க் பட்டியல் வெளியீடு: கால்நடை மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வு 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடக்கிறது

ரேங்க் பட்டியல் வெளியீடு: கால்நடை மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வு 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடக்கிறது
கால்நடை மருத்துவ படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. கலந்தாய்வு 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் திலகர் தெரிவித்தார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் திலகர்  சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ரேங்க் பட்டியல் வெளியீடு தமிழ்நாடு கால்நடை மருத்துவ படிப்பு 2016-2017-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 20-ந் தேதி முதல் ஆன்-லைனில் வழங்கப்பட்டன. 17-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
மொத்தம் 18 ஆயிரத்து 302 பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் முறையாக அனுப்பியவர்கள் 16 ஆயிரத்து 938 பேர். இதில் தகுதியானவர்களாக 16 ஆயிரத்து 168 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 1,800 பேருக்கு மேல் அதிகமாக விண்ணப்பித்து இருக்கின்றனர். விண்ணப்பித்தவர்களுக்கான ரேங்க் பட்டியல் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை மாணவர்கள் பார்த்து தெரிந்துகொள்ளலாம். முதல் 10 இடங்களை பிடித்தவர்கள்... ரேங்க் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களின் பெயர் விவரம் வருமாறு:- * எஸ்.தினேஷ்வர் (199.75) நாமக்கல் மாவட்டம். * ஆர்.தட்சிணாமூர்த்தி (199.75) திருச்சி மாவட்டம். * எஸ்.நந்தினி (199.50) நாமக்கல் மாவட்டம். * ஏ.ஆர்.தினேஷ்குமார் (199.50) தர்மபுரி மாவட்டம். * என்.வி.பிரவீண் (199.25) நாமக்கல் மாவட்டம். * என்.வர்ஷினி (199.25) நாமக்கல் மாவட்டம். * யு.பிரசன்னா குமார் (199.25) கரூர் மாவட்டம். * சி.சாருமதி (199.25) சேலம் மாவட்டம். * பி.கே.ஸ்கந்தா பிரசாத் (199.25) நாமக்கல் மாவட்டம். * எஸ்.மோனிசா (199.25) நாமக்கல் மாவட்டம். (இதில் முதல் 2 இடத்தை பிடித்தவர்கள் ஏற்கனவே மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது) கலந்தாய்வு 4 கால்நடை மருத்துவ கல்லூரிகள் மற்றும் 2 தொழில்நுட்ப கல்லூரிகள் என மொத்தம் உள்ள 6 கல்லூரிகளில் இருக்கும் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, பி.டெக் உணவு தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் ஆகிய 4 இளநிலை படிப்புகளில் மொத்தம் 380 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு 13-ந் தேதி (புதன்கிழமை), 14-ந் தேதி (வியாழக்கிழமை), 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய தேதிகளில் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி, அண்ணா கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. இவர்களுக்கான அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட இருக்கின்றன. மேலும் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலமும் அழைப்பு விடப்பட இருக்கின்றன. கலந்தாய்வுக்கு வருபவர்கள் கண்டிப்பாக அழைப்பு கடிதத்தையும், அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். இவ்வாறு துணைவேந்தர் டாக்டர் திலகர் கூறினார்.


No comments:

TRB