Thursday, 7 July 2016

பிளஸ்-2 தேர்வு எழுதியவர்கள் 2-வது முறையாக மறுமதிப்பீடு கோர முடியாது மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு

பிளஸ்-2 தேர்வு எழுதியவர்கள் 2-வது முறையாக மறுமதிப்பீடு கோர முடியாது மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு
பிளஸ்-2 தேர்வு எழுதியவர்கள் 2-வது முறையாக மறு மதிப்பீடு கோர முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. ஐகோர்ட்டில் மனு பழனியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- என் மகன் பிளஸ்-2 தேர்வில் உயிரியல் பாடத்தில் 195 மதிப்பெண் பெற்றிருந்தான். மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்ததன் மூலம் 196 மதிப்பெண் கிடைத்தது. உயிரியல் பாடத்தில் விலங்கியல் பிரிவில் சில கேள்விகளுக்கான விடைகள் சரியாக மதிப்பீடு செய்யப்படாததால் அவனுக்கு 3½ மதிப்பெண் குறைவாக கிடைத்துள்ளது. இதனால் அவனுக்கு மருத்துவ படிப்புக்கான இடம் கிடைப்பது மறுக்கப்பட்டுள்ளது. எனவே, என் மகனின் உயிரியல் பாடத்தின் விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனு தள்ளுபடி இந்த மனுவை நீதிபதி வேணுகோபால் விசாரித்தார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன், சிறப்பு அரசு வக்கீல் வி.ஆர்.சண்முகநாதன் ஆகியோர், ‘மனுதாரரின் மகன் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு துல்லியமாக விடை அளிக்கவில்லை. அந்த கேள்விகளுக்கு கூடுதல் விளக்கம் அளித்திருக்க வேண்டும். அவ்வாறு கூடுதல் விளக்கம் அளிக்கவில்லை. அரசாணைப்படி 2-வது முறையாக மறுமதிப்பீடு கோர முடியாது’ என்று தெரிவித்தனர். மனுவை விசாரித்த நீதிபதி தீர்ப்பில் கூறியிருப்பதாவது:- “அரசாணைப்படி ஒரே ஒரு முறை மட்டுமே மறுமதிப்பீடு கோர முடியும். அவ்வாறு ஒரு முறை மறு மதிப்பீட்டில் கிடைக்கும் மதிப்பெண் தான் இறுதியானது. 2-வது முறையாக மறுமதிப்பீடு கோர முடியாது. மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.” இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.


No comments:

TRB