Monday, 18 July 2016

www.upsc.gov.in | என்ஜினீயர்களுக்கு 279 அதிகாரி பணிகள்

என்ஜினீயர்களுக்கு 279 அதிகாரி பணிகள்
மத்திய அரசு துறைகளில் 279 அதிகாரி பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி. பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ராணுவ தொழிற்சாலை வாரியம் மற்றும் ஏரோனாட்டிகல் குவாலிட்டி அஸ்யூரன்ஸ் இயக்குனரகம், கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் ஆந்த்ரோபாலஜிகல் சர்வே அமைப்பு ஆகியவற்றில் பல்வேறு அதிகாரி பணியிடங்களுக்கு 279 பேரை தேர்வு செய்ய உள்ளனர். இதில் ராணுவ தொழிற்சாலை வாரியத்தில் ஜூனியர் ஒர்க் மேனேஜர் (மெக்கானிக்கல்) பிரிவு பணிக்கு மட்டும் 153 பேர் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு... வயது வரம்பு : 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அதிகமான பணியிடங்கள் உள்ளன. ஒரு சில அதிகாரி பணிகளுக்கு 45 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. கல்வித் தகுதி: மெக்கானிக்கல், கெமிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், டெக்ஸ்டைல், லெதர், மெட்டலர்ஜிகல், ஏரோநாட்டிகல், கம்ப்யூட்டர், ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ், மைனிங் போன்ற பிரிவுகளில் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆந்த்ரோபாலஜி படித்தவர்களுக்கு சில பணியிடங்கள் உள்ளன. சில பணிகளுக்கு அனுபவம் கோரப்பட்டு உள்ளது. தேர்வு செய்யும் முறை : ரெக்ரூட்மென்ட் டெஸ்ட் (ஆர்.டி.) மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கட்டணம் : விண்ணப்பதாரர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.upsc-o-n-l-i-ne.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை நிரப்பி, கட்டணம் செலுத்த வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை பிரிவியூ கொடுத்து சரிபார்த்த பிறகு சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் கணினிப்பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். விண்ணப்பிக்க கடைசி நாள் : 29-7-2016-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


No comments: