Monday, 4 July 2016

சித்தா படிப்புக்கு ஜூலை 28 வரை விண்ணப்பம்.

சித்தா படிப்புக்கு ஜூலை 28 வரை விண்ணப்பம்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோ பதி துறையில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் (அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு) 2016-17-ம் ஆண்டுக்கான ஒற்றைச் சாளர முறையில் பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பிஎன்ஒய்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ் பட்டப் படிப்புகளில் சேர பிளஸ் 2 முடித்த மாணவ-மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
6 அரசு கல்லூரிகளில் 356 இடங்களும், 21 சுயநிதிகல்லூரி களில் 809 இடங்களும் உள்ளன.விண்ணப்ப படிவங்கள் ஜூலை 28-ம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்பங்களை சென்னை, பாளையங்கோட்டை, திருமங்கலம், கோட்டார் அரசு இந்தியமுறை மருத்துவக் கல்லூரிகளில் அலு வலக வேலைநாட்களில் பெற் றுக்கொள்ளலாம். பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வுக்குழு அலுவலகத்தில் ஜூலை29-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.


No comments:

TRB