Thursday, 28 July 2016

தனித்தேர்வர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு முடிவு இன்று (28.7.2016)வெளியீடு. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க 30-ந்தேதி கடைசி நாள்

தனித்தேர்வர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு முடிவு இன்று வெளியீடு.மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க 30-ந்தேதி கடைசி நாள்
தனித்தேர்வர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அந்த தேர்வு முடிவு இன்று (28.7.2016) (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவை மாணவ-மாணவிகள் இணையதளத்தில்( www.dge.tn.nic.in) இருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த நாள் தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். அதன் மூலம் முடிவு மற்றும் மதிப்பெண்களைதெரிந்து கொள்ளலாம்.
இது தற்காலிக சான்றிதழ் ஆகும். பின்னர் நிரந்தர சான்றிதழ் வழங்கப்படும். முடிவை பார்த்து விட்டு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று நாளை(வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 30-ந் தேதி கடைசி நாள். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

No comments:

TRB