Thursday, 21 July 2016

இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் பணி 28-ல் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் பணி 28-ல் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளையில் நிர்வாக பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய வரும் 28-ம் தேதி சென்னையில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு உதவியுடன், இந்திய செஞ்சிலுவை சங்கம் மூலம் சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இலவச அமரர் ஊர்தி சேவை நிர்வாகத்தில் நிதி மேலாளர், மனித ஆற்றல் மேலாளர், கணினி அமைப்பு மேலாளர், மேற்பார்வையாளர், வாகன பராமரிப்பு மேலாளர், திட்ட உதவி மேலாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 28-ம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை, சென்னை எழும்பூர் மாண்டியத் சாலையில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 25 முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இதில் பங்கேற்கலாம். பங்கேற்க தேவை யான கல்வித் தகுதி மற்றும் முன் அனுபவம் தொடர்பான விவரங் களைப் பெற, அலுவலக வேலை நாட்களில் 044-42147572 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


No comments: