Friday, 22 July 2016

29-ந்தேதி தொடங்கும் குரூப்-1 மெயின்தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

29-ந்தேதி தொடங்கும் குரூப்-1 மெயின்தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 19 துணை கலெக்டர்கள், 26 போலீஸ் துணைசூப்பிரண்டுகள் உள்ளிட்ட 74 உயர் பணிகளுக்கு குரூப்-1 முதல் நிலை தேர்வை கடந்த வருடம் நவம்பர் மாதம் 8-ந்தேதி நடத்தியது. அதன் முடிவு கடந்த ஏப்ரல் மாதம் 20-ந்தேதி வெளியிடப்பட்டது.
இதில் 4 ஆயிரத்து 33 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் 29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை மெயின்தேர்வை எழுத உள்ளனர். அவர்களுக்கு சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 38 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்வு எழுத ஹால் டிக்கெட்டுகள் www.tnpsc.gov.in மற்றும் www.tnps-c-ex-ams.net ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப எண் அல்லது பதிவு எண்ணை உள்ளடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


No comments:

TRB