Wednesday, 27 July 2016

பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு ஆகஸ்டு 3-ம் தேதி (புதன்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நடைபெறும்.

பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு.
அரசு பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அதாவது முதல்வர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கு 2016-17-ம் ஆண்டுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு ஆகஸ்டு 3-ம் தேதி (புதன்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நடைபெறும்.
அதேபோல், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் பணி புரியும் ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந் தாய்வு ஆகஸ்டு 4-ம் தேதி (வியாழக்கிழமை) தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நடைபெறும் என்று மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் எஸ்.மதுமதி தெரிவித்துள்ளார்.

No comments:

TRB