Thursday, 7 July 2016

உயர்மட்ட குழு அமைக்க ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் 4 மாதம் ஒத்திவைப்பு

உயர்மட்ட குழு அமைக்க ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் 4 மாதம் ஒத்திவைப்பு
மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் 4 மாதம் ஒத்திவைக்கப்பட்டது. வேலைநிறுத்தம் மத்திய அரசின் 7-வது சம்பள கமிஷன் அறிவிப்பால் அதிருப்தி அடைந்த மத்திய அரசு ஊழியர்கள் வருகிற 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தெரிவித்தனர்.
ரெயில்வே, தபால் துறை உள்ளிட்ட கூட்டமைப்பு சங்கங்கள் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டன. இதற்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. தள்ளி வைப்பு இதனிடையே சம்பள கமிஷனில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த மாதம் 30-ந் தேதி மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை மத்திய அரசு ஊழியர் கூட்டமைப்பு சங்கத்தினர் சந்தித்து பேசினர். இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை தள்ளி வைத்தனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் மத்திய அரசு கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள், ராஜ்நாத் சிங்கை சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர்மட்ட குழுவை விரைவில் அமைத்து தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்தன. இந்த சந்திப்புக்கு பிறகு மத்திய அரசு சம்பள கமிஷனில் உள்ள குறைகளை நீக்க உயர்மட்ட குழு அமைக்க ஒப்புதல் அளித்துள்ளதால் தங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக மத்திய அரசு ஊழியர் கூட்டமைப்பு நேற்று இரவு அறிவித்தது.


No comments: