Monday, 11 July 2016

டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு உருக்கு நிறுவனத்தில் வேலை.விண்ணப்பிக்க கடைசி நாள் 5-8-2016

டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு உருக்கு நிறுவனத்தில் வேலை
உருக்கு நிறுவனத்தில் 226 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு இதில் கணிசமான பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய உருக்கு ஆணைய நிறுவனம் சுருக்கமாக செயில் (sail) என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் சேலம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் செயில் நிறுவன கிளைகள் செயல்படுகின்றன. தற்போது பர்ன்பூரில் செயல்படும் செயில் நிறுவன கிளையில் ‘ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர்’ மற்றும் ‘ஆபரேட்டர் கம் டெக்னீசியன்’, ‘அட்டன்ட் கம் டெக்னீசியன்’ போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 226 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ‘ஆபரேட்டர் கம் டெக்னீசியன்’ பணிக்கு 134 இடங்களும், அட்டன்ட் கம் டெக்னீசியன் பணிக்கு 80 இடங்களும், மெடிக்கல் ஆபீசர் பணிக்கு 12 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை தெரிந்து கொள்வோம்...
வயது வரம்பு : ஆபரேட்டர் மற்றும் அட்டன்டன்ட் பணிக்கு 28 வயதுக்கு உட்பட்டவர்களும், ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு 37 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் ஆபரேட்டர் பணிகளுக்கும், ஐ.டி.ஐ. படித்தவர்கள் அட்டன்டன்ட் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். எம்.பி.பி.ஸ்., எம்.டி., எம்.எஸ்., பி.டி.எஸ், எம்.எஸ்சி. நர்சிங் படித்தவர்களுக்கும் பணிகள் உள்ளன. கட்டணம் : ஆபரேட்டர் பணி விண்ணப்பதாரர்கள் ரூ.250-ம், அட்டன்டன்ட் பணி விண்ணப்பதாரர் ரூ.150-ம், மற்ற பணி விண்ணப்பதாரர்கள் ரூ.500-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 5-8-2016-ந் தேதியாகும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள http://sailcareers.com/ என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.


No comments: