Sunday, 17 July 2016

ஆசிரியர்கள் பொது மாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் 6-ந் தேதி தொடங்குகிறது

ஆசிரியர்கள் பொது மாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் 6-ந் தேதி தொடங்குகிறது
2016-17-ம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் 6-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. பொது மாறுதல் கலந்தாய்வு 2016-2017-ம் கல்வி ஆண்டில் அரசு நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-
> சிறப்பு முன்னுரிமையின் அடிப்படையில் மாறுதல் கோரும் ஆசிரியரிடம் உரிய சான்றிதழ் இருந்தால் மட்டுமே சிறப்பு முன்னுரிமைக்கு பரிசீலிக்கப்பட வேண்டும்

> பொதுமாறுதல் கோரும் ஆசிரியர் தற்போது பணிபுரியும் பள்ளிக்கு பெற்ற மாறுதல் வகையை கூர்ந்தாய்வு செய்து பதிவு செய்ய வேண்டும். தற்போது பணிபுரியும் பள்ளிக்கான மாறுதல் ஆணையை சரிபார்த்து அரசாணையில் வழங்கப்பட்ட அறிவுரைகளின் படி தகுதி இருப்பின் மாறுதல் விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும்.

> ஒரு ஆசிரியருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே பதிவு செய்தல் வேண்டும். ஒரே விண்ணப்பத்தில் மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் இரண்டும் சேர்த்தும் விண்ணப்பிக்கலாம். ஒரு ஆசிரியருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டால் அவரது பெயர் கணினியில் தானாகவே முழுமையாக நீக்கப்பட்டுவிடும் என்பதால் அவர் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

> பொது மாறுதல் விண்ணப்பத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக கூர்ந்தாய்வு செய்து கணினியில் பதிவு செய்தல் வேண்டும். பதிவு செய்த விவரங்களை பின்னர் எக்காரணம் கொண்டும் திருத்தம் செய்தல் இயலாது.

> மாறுதல் கோரும் ஆசிரியரது விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவு செய்தவுடன் இரண்டு நகல் எடுத்து, ஒரு நகலை விண்ணப்பதாருக்கும், ஒரு நகலை அலுவலகத்திலும் பராமரிக்க வேண்டும்.

> குறிப்பிட்ட தேதிக்குப்பின் பொது மாறுதல் விண்ணப்பங்கள் மற்றும் காலிப்பணியிட விவரங்களை இணையதளத்தில் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய இயலாது என்பதால் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய பொது மாறுதல் விண்ணப்பங்கள் மற்றும் காலிப்பணியிட விவரங்களை முழுமையாக சரிபார்த்து சரியான விவரங்களை குறிப்பிட்ட தேதிக்குள் தவறாமல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

> விண்ணப்பங்கள் 19.7.2016 முதல் 28.7.2016 வரை பெறப்பட வேண்டும். இணையதளத்தின் முகவரி பின்னர் அறிவிக்கப்படும்.
கலந்தாய்வு நடைபெறும் நாட்கள்...
கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் விவரம் வருமாறு:-
1. அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) - 6.8.2016 (சனிக்கிழமை).
அரசு நகராட்சி மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு - 7.8.2016 (ஞாயிற்றுக்கிழமை).
அரசு நகராட்சி உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) - 13.8.2016 (சனிக்கிழமை).
அரசு நகராட்சி மேல் நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்திற்குள் மாறுதல்) - 20.8.2016 (சனிக்கிழமை).
அரசு நகராட்சி மேல் நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) - 21.8.2016 (ஞாயிற்றுக் கிழமை).
அரசு நகராட்சி மேல் நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு - 22.8.2016 (திங்கட்கிழமை).
உடற்கல்வி ஆசிரியர்கள், தையல், இசை, கலை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல்) - 23.8.2016 (செவ்வாய்க்கிழமை).
உடற்கல்வி ஆசிரியர்கள், தையல், இசை, கலை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) - 24.8.2016 (புதன்கிழமை).
பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் - 27.8.2016 (சனிக்கிழமை) முதல் 29.8.2016 (திங்கட்கிழமை) வரை.
பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்திற்குள் மாறுதல்) - 3.9.2016 (சனிக்கிழமை)
பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) - 4.9.2016 (ஞாயிற்றுக் கிழமை).
இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி, சிறப்பாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு - 6.9.2016 (செவ்வாய்க்கிழமை).
மேற்கண்ட தகவல் பள்ளிக் கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: