Monday, 18 July 2016

அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் 8 பேர் சேரவில்லை இன்று நடைபெறுவதாக இருந்த 2-வது கட்ட கலந்தாய்வு தள்ளிவைப்பு

அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் 8 பேர் சேரவில்லை இன்று நடைபெறுவதாக இருந்த 2-வது கட்ட கலந்தாய்வு தள்ளிவைப்பு
தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைத்தும் 8 பேர் மருத்துவ கல்லூரிகளில் சேரவில்லை. இன்று (திங்கட்கிழமை) நடைபெறுவதாக இருந்த 2-வது கட்ட கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கலந்தாய்வு தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனரகம் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர்ந்து படிக்க முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வு சென்னையில் உள்ள பல் நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்று முடிந்துவிட்டது. இந்த கலந்தாய்வில் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 318 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பின. சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள 470 எம்.பி.பி.எஸ். இடங்களில் 398 இடங்கள் நிரம்பின. கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட 65 இடங்கள் நிரம்பின. பல் மருத்துவ இடங்களில் சேர நடந்த கலந்தாய்வில் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவ கல்லூரியில் 85 இடங்கள் நிரம்பின. கலந்தாய்வு தள்ளிவைப்பு 2-து கட்ட மருத்துவ கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. நடந்து முடிந்த முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடங்கள் கிடைத்தவர்களில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 8 பேரும், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 18 பேரும் சேரவில்லை. அவர்கள் வேறு படிப்பு படித்து கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


No comments:

TRB