Monday, 11 July 2016

annauniv.edu | B.Arch. - 2016 (Application Status) பி.ஆர்க். படிப்புக்கான விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? இல்லையா? என்னும் நிலவரத்தை ஆன்லைனில் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பி.ஆர்க். படிப்பு விண்ணப்ப நிலவரம்
பி.ஆர்க். படிப்புக்கான விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? இல்லையா? என்னும் நிலவரத்தை ஆன்லைனில் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக் சர் கல்லூரி மற்றும் அரசு கல் லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள பி.ஆர்க். இடங்கள் (கட்டிடக்கலை படிப்பு) மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும் இடங்கள் ஆகியவை அண்ணா பல்கலைக்கழக பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.
நடப்பு கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் பதிவு ஜுன் 25-ம் தேதி தொடங்கியது. ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூலை 9-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், பி.ஆர்க். படிப் புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் விண்ணப்ப நிலவரத்தை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தை (www.annauniv.edu) பயன்படுத்தி ஆன்லைன் மூலம் அறிந்துகொள்ளலாம் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை ஜெ.இந்துமதி தெரிவித்துள்ளார்.


No comments:

TRB