Thursday, 28 July 2016

தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 18 உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்தமிழக அரசு உத்தரவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ் பிறப்பித்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- சென்னை மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், கரூர் மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். சென்னை மாநகராட்சி மண்டல துணை கமிஷனர் (தெற்கு) ஏ.அண்ணாதுரை, தஞ்சாவூர் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (கல்வி) எம்.ஆசியா மரியம், நாமக்கல் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். நில நிர்வாக இணை கமிஷனர் எஸ்.ஏ.ராமன், வேலூர் கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட் டார். திருவாரூர் கலெக்டர் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய இணை மேலாண்மை இயக்குனர் எல்.நிர்மல்ராஜ், திருவாரூர் கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். திருவண்ணாமலை கலெக்டர் ஏ.ஞானசேகரன், கடலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் டி.ஜி.வினய், திண்டுக்கல் கலெக்டர் ஆனார். விருதுநகர் மாவட்ட கலெக்டர் வி.ராஜாராமன், நகராட்சி நிர்வாக இணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். கோவை மாவட்ட முன்னாள் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், தோட்டக்கலை மற்றும் பயிர்கள் இயக்குனராக மாற்றப்பட்டார். கடலூர் மாவட்ட கலெக்டர் எஸ்.சுரேஷ்குமார், நில நிர்வாக இணை கமிஷனர் ஆனார். தஞ்சாவூர் கலெக்டர் வேலூர் மாவட்ட கலெக்டர் ஆர்.நந்தகோபால், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறையின் இணைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். தஞ்சாவூர் கலெக்டர் என்.சுப்பையன், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனராக மாற்றப்பட்டார். திருவாரூர் கலெக்டர் எம்.மதிவாணன், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) தலைமை செயல் அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார். கரூர் மாவட்ட மூத்த கலெக்டர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதிச் சேவை மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று 18 உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். திருச்சி, சேலம், திருப்பூருக்கு புதிய போலீஸ் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டனர். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று இரவு பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:- புதிய கமிஷனர்கள் * மாநில குற்ற ஆவணக்காப்பக ஐ.ஜி. சஞ்சய் குமார், சேலம் நகர போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டார். * சேலம் நகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், மாநில குற்ற ஆவணக்காப்பக ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். * சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக ஐ.ஜி.யாக உள்ள பாரி, மேற்கு மண்டல ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார். * திருப்பூர் நகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா, திருச்சி நகர போலீஸ் கமிஷனராக பதவி ஏற்பார். * திருச்சி நகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர், திருப்பூர் நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் * நெல்லை நகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் பி.ராஜன், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார். * சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமீத்குமார்சிங், நெல்லை நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார். * மாநில கியூ பிரிவு போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்பார். * கோவை நகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் சிவகுமார், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார். * சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனர் ராஜசேகரன், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். * கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனராகிறார். * திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், சிவகங்கை மாவட்ட சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார். சூப்பிரண்டு துரை * சென்னை கிழக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் துரை, நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார். * சென்னை போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர் உமா, திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார். * புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் கடிமானி, சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வராக பதவி ஏற்பார். * காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் மகேஷ்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். * சென்னை லஞ்ச ஒழிப்பு சூப்பிரண்டு (தெற்கு மண்டலம்) சேவியர் தனராஜ், மாநில கியூ பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார். * மாநில அமைப்பு சார்ந்த குற்ற உளவுப்பிரிவு சூப்பிரண்டு சரவணன் மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

No comments: