Thursday, 28 July 2016

என்ஜினீயர் பதவிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் நடந்த எழுத்து தேர்வின் முடிவுகளை ஒருவார காலத்துக்குள் வெளியிடவேண்டும் என்று மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

என்ஜினீயர் பதவிகளுக்காக நடந்த எழுத்து தேர்வு முடிவுகளை ஒரு வாரத்துக்குள் வெளியிட வேண்டும் மின்பகிர்மான கழகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
என்ஜினீயர் பதவிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் நடந்த எழுத்து தேர்வின் முடிவுகளை ஒருவார காலத்துக்குள் வெளியிடவேண்டும் என்று மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எழுத்து தேர்வு மின்வாரியத்தில் காலியாக உள்ள எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் என்ஜினீயர்களின் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப கடந்த ஜனவரி 31-ந் தேதி தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எழுத்து தேர்வு நடத்தியது.
இந்த தேர்வில், ஏற்கனவே மின்வாரியத்தில் தொழில் பழகுநர்களாக (அப்ரன்டீசாக) பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த எழுத்து தேர்வில் தொழில் பழகுநர்களாக பயிற்சி முடித்தவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும், தேர்வின் முடிவினை வெளியிட இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட்டது. தேர்வு முடிவு இந்த தேர்வில் பங்கேற்றவர்களில் சுமார் 40 பேர், தேர்வின் முடிவை வெளியிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி, ‘ஏற்கனவே இந்த தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டிருப்பதால், முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை’ என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி டி.எஸ்.சிவஞானம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- எழுத்து தேர்வில் பங்கேற்ற அனைவரது தேர்வு முடிவுகளையும் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிடலாம். இந்த முடிவுகளை வெளியிடுவதால், ஏற்கனவே வழக்கு தொடர்ந்தவர்களின் உரிமை பாதிக்கப்படாது. வெளியிடலாம் அதே நேரம், இந்த தேர்வு முடிவுகளை மட்டுமே வெளியிட வேண்டும். அந்த முடிவுகளின் அடிப்படையில் பணி நியமனம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது. ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு பின்னரே, எந்த ஒரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவை தொடர்ந்து, எழுத்து தேர்வு முடிவுகளை ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று அட்வகேட் ஜெனரல் கூறினார். இதை பதிவு செய்து கொண்டு, எழுத்து தேர்வு முடிவுகளை ஒரு வாரத்துக்குள் வெளியிடவேண்டும் என்று உத்தரவிடுகிறேன். இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்டு 8-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

No comments:

TRB