Thursday, 28 July 2016

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனை நியமித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பெண் ஒருவர் முதன்முதலாக ஜனாதிபதி வேட்பாளர் ஆகி இருப்பது புதிய சரித்திரம் ஆகும்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஹிலாரி, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆனார் புதிய சரித்திரம் படைத்தார் ஹிலாரி
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனை நியமித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பெண் ஒருவர் முதன்முதலாக ஜனாதிபதி வேட்பாளர் ஆகி இருப்பது புதிய சரித்திரம் ஆகும். ஹிலாரி வேட்பாளர் ஆனார் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளதால், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் (வயது 70) சமீபத்தில் நியமிக்கப்பட்டார். தொழில் அதிபராக விளங்கிய அவர் அரசியலில் குதித்து ஒரே ஆண்டில் இந்த நிலையை அடைந்தது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனை (68), பிலடெல்பியாவில் நடந்த கட்சி மாநாட்டில் முறைப்படி நியமித்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தேவையான 2,383 பிரதிநிதிகள் ஆதரவை அவர் ஏற்கனவே கடந்த மாதமே பெற்று விட்டார் என்பது நினைவுகூரத்தக்கது. புதிய சரித்திரம் அமெரிக்காவின் வரலாற்றில், இரு பெரும் கட்சிகளான ஜனநாயக கட்சியிலும் சரி, குடியரசு கட்சியிலும் சரி, இதுவரையில் ஜனாதிபதி வேட்பாளராக ஒரு பெண் நிறுத்தப்பட்டது கிடையாது. அந்த வகையில் ஹிலாரி கிளிண்டன் புதிய சரித்திரம் படைத்து விட்டார். இது தொடர்பாக ஜனநாயக கட்சி மாநாட்டில் பேசிய பிரதிநிதிகள், “அமெரிக்காவின் 240 ஆண்டு கால வரலாற்றில் ஒரு பெண் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஆகி இருப்பது புதிய மைல் கல்” என வர்ணித்தனர். அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமையே 1920-ம் ஆண்டுதான் கிடைத்தது. சாண்டர்ஸ் ஆதரவாளர்கள் விரக்தி தான் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதை ஹிலாரி கிளிண்டன் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் ‘வரலாறு’ என்ற ஒற்றை வார்த்தையில் நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 4.13 மணிக்கு பதிவு செய்தார். ஏற்கனவே அவர் வேட்பாளர் ஆவதற்கான தகுதி பெற்று விட்டாலும் கூட, மாகாண வாரியாக ஓட்டுக்கள் நேற்றுதான் சரிபார்க்கப்பட்டு இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டன. ஹிலாரியுடன் கடைசி வரை மோதிய போட்டியாளர் பெர்னீ சாண்டர்ஸ் ஆதரவாளர்கள், தங்கள் தலைவரின் தோல்வியை ஷீரணிக்க முடியாமல் விரக்தி அடைந்தனர். ஆனால் ஹிலாரி ஆதரவாளர்களின் ஆதரவு கோஷம், பெர்னீ சாண்டர்ஸ் ஆதரவாளர்களை பின்னுக்கு தள்ளியது. பலத்த கரகோஷம் ஹிலாரியின் பெயரை அமெரிக்க பாராளுமன்றத்தின் மிக மூத்த உறுப்பினரான பார்பரா மிகுல்ஸ்கை முன்மொழிந்தார். அதை பெர்னீ சாண்டர்ஸ் வழிமொழிந்தபோது பலத்த கரகோஷம் எழுந்தது. கூட்டத்தினர் அவரது பெயர் அறிவிக்கப்பட்டபோது ஆமோதித்து முழங்கினர். தனது ஆதரவாளர்கள் ஹிலாரியை ஆதரிக்க வேண்டும் என்று பெர்னீ சாண்டர்ஸ் கேட்டுக்கொண்டார். மாநாட்டில் செயற்கைக்கோள் வீடியோ இணைப்பின் வழியாக பெண்களுக்கு செய்தி விடுத்த ஹிலாரி, “நான் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி ஆகலாம். ஆனால் உங்களில் ஒருவர் எனக்கு அடுத்து வரலாம்” என குறிப்பிட்டார். தான் வேட்பாளராக நியமிக்கப்பட்டதை ஏற்று இன்று (வியாழக்கிழமை) ஜனநாயக கட்சி தேசிய மாநாட்டில் ஹிலாரி பேசுகிறார்.

No comments:

TRB