Saturday, 30 July 2016

டிப்ளமோ பார்மசி' படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

டிப்ளமோ பார்மசி தரவரிசை வெளியீடு
டிப்ளமோ பார்மசி' படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், டிப்ளமோ பார்மசி மற்றும் இந்த படிப்பு முடித்தோர் நேரடியாக, இரண்டாம் ஆண்டில் சேரும், பி.பார்ம்., மற்றும், 'டிப்ளமோ நர்சிங்' முடித்தோர், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரும், 'போஸ்ட் பேசிக் - பி.எஸ்சி.,' படிப்புகளுக்கு, 1,550 இடங்கள் உள்ளன.
இதற்கு, 8,000 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர்.இந்நிலையில், விண்ணப்பதாரர்களுக்கான தரவரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. இதன் விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். சேர்க்கை கலந்தாய்வு, ஆக., 2ம் வாரத்தில் நடக்கும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

TRB