Monday, 11 July 2016

employment news-இந்த வார வேலை வாய்ப்பு செய்திகள்

employment news-இந்த வார வேலை வாய்ப்பு செய்திகள்
இஸ்ரோ : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின், ஸ்ரீஹரிகோட்டா கிளையில் டெக்னீசியன் (கிரேடு-பி) மற்றும் தீயணைப்பு வீரர் பணிக்கு 53 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. இது பற்றிய விவரங்களை http://sdsc/shar.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-7-2016-ந் தேதியாகும்.

மத்திய பல்கலைக்கழகம் : தெற்கு பீகார் மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் போன்ற பணிகளுக்கு மொத்தம் 73 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பாடவாரியான பணியிடங்கள் விவரத்தை இணையத்தில் பார்க்கலாம். இது பற்றிய விவரங்களை www.cusb.ac.in மற்றும் www.cub.ac.in என்ற இணையதளங்களில் பார்த்துவிட்டு 18-7-2016-ந்தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

விமான நிறுவனம் : ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் முதன்மை மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட அதிகாரி பணிகளுக்கு 8 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எம்.சி.ஏ., மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. இது பற்றிய அறிவிப்பில் இருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். www.ai-r-i-n-d-i-a-ex-p-ress.in என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்க்கலாம்.

சுற்றுலாத்துறை : மத்திய சுற்றுலாத் துறையின் கீழ் செயல்படும் ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் தொழில்நுட்ப மையத்தில் உதவி விரிவுரையாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 8 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரங்களை www.ih-m-a-h-m-e-d-a-b-ad.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் : 22-7-2016.

சுரங்கத்துறை: சுரங்கத்துறையின் கீழ் இயங்கும் நிலக்கரி சுரங்க நலநிதி நிறுவனத்தில் அசிஸ்டன்ட் கமிஷனர் பணிகளுக்கு 18 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டெபுடேசன் பணியிடங்களான இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜூலை 2-8 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் முழுமையான விவரங்களை பார்க்கலாம். www.bp-rd.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கி அனுப்பலாம். அறிவிப்பில் இருந்து 2 மாதங்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும்.

நிதித்துறை: மத்திய நிதித்துறையில் ஆடிட்டர் பணிக்கு 9 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்ஜெட்டிங் அண்ட் அக்கவுண்டிங் பிரிவில் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை ஜூலை 2-8 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்த்துவிட்டு, அறிவிப்பில் இருந்து 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பண அச்சகம் : மத்திய பிரதேச மாநிலம் ஹோசங்காபாத் பண அச்சகத்தில் ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு 28 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள். டிப்ளமோ படித்தவர்களுக்கு பணி வாய்ப்பு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை http://spm-h-os-h-a-n-g-a-b-ad.spm-c-il.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 17-7-2016.

ஐ.ஐ.டி. : தேசிய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி.யின் ஜோத்பூர் கிளையில் கற்பித்தல் சாராத 27 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. www.iitj.ac.in on என்ற இணையதளத்தில் இது பற்றிய விரிவான விவரங்களை பார்க்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 29-7-2016-ந் தேதியாகும்.

சத்தியவதி கல்லூரி : டெல்லி பல்கலைக் கழகத்தின் அங்கமான சத்யவதி கல்லூரியில் அட்மின் ஆபீசர், லைபிரரி அட்டன்ட், லேப் அட்டன்ட் போன்ற பணிகளுக்கு 11 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரங்களை www.saty-aw-ati.du.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்து பல்கலைக்கழகம் : பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஆரிய மகிளா பட்டமேற்படிப்பு கல்லூரியில் டீச்சர் மற்றும் லேப் அட்டன்ட் உள்ளிட்ட பணிகளுக்கு 20 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரங்களை www.ary-a-m-a-h-i-l-a-p-g-cvns.org.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பங்கள் அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் சென்றடைய வேண்டும்.

ஆர்.சி.ஐ. : டி.ஆர்.டி.ஓ. ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் துணை அமைப்பு ரிசர்ச் சென்டர் இமரத் (ஆ.சி.ஐ.). ஹைதராபாத்தில் செயல்படும் இந்த ஆய்வு அமைப்பில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோ பணிக்கு 17 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.இ., பி.டெக். படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விண்ணப்பதாரர் 28 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விரிவான விவரங்களை https://rc-i-l-ab.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, 13-7-2016-ந் தேதிக்குள் ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.


No comments:

TRB