Monday, 11 July 2016

ssc.nic.in-ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வுமுறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வுமுறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வுமுறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, முதனிலைத் தேர்வின் (Tier-1 Exam) ஒவ்வொரு பகுதியிலும் தலா 50 கேள்விகள் என 200 கேள்விகள் என்று இருந்தது. தற்போது, நுண்ணறிவுத்திறன் (General Intelligence & Reasoning) 25 கேள்விகள்; பொது அறிவு (General Awareness) 25 கேள்விகள்; கணிதம் (Quantitative Aptitude) 25 கேள்விகள்; மற்றும் ஆங்கிலம் (English) 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் மட்டுமே இடம் பெறும். மொத்த மதிப்பெண்கள் 200 என்பதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, ஒவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள் ஆகும் (முதலில் இருந்தது 1 மதிப்பெண்). முதனிலைத்தேர்வுக்கான கால அவகாசமும் இரண்டு மணி நேரம் (120 நிமிடங்கள்) என்பதிலிருந்து 75 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. தவறான விடை களுக்கான எதிர்மறை மதிப்பெண் (negative marks) 1/4 பங்கு அதாவது, 0.5 மதிப்பெண் ஆகும் (முதலில் 0.25 மதிப்பெண் ஆக இருந்தது).
இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக இத்தேர்வுமுறை online-™ அதாவது, கணிப்பொறி வாயிலாக (computer based) தேர்வாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலைத்தேர்வும் (Tier-II Exam) கணிப்பொறி வகையிலான தேர்வே என்பதையன்றி இதில் வேறு எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதாவது, அதே இரண்டு தாள்கள் கணிதம் (100 கேள்விகள்) மற்றும் ஆங்கிலம் (200 கேள்விகள்); ஒவ்வொன்றுக்கும் அதே 200 மதிப்பெண்கள் - மொத்தம் 400 மதிப்பெண்கள்; அதே எதிர்மறை மதிப்பெண்கள் - கணிதத்தில் 0.5 மற்றும் ஆங்கிலத்தில் 0.25; அதே கால அவகாசம் தலா இரண்டு மணி நேரங்கள் என இதில் மாற்றம் எதுவுமில்லை. இந்த வருடத்திலிருந்து இம்மாதிரியான Group C மற்றும் Group B (Non-gazetted) பதவிகளுக்கு நேர்காணல் (interview) நடைபெறாது என்று பிரதமர் கூறியிருந்தது நினைவி ருக்கலாம். அதன்படி, நேர்காணல் இல்லை. அதற்குப்பதிலாக, மூன்றாம் நிலைத் தேர்வு (Tier-III Exam) ஒன்று அறிமுகப் படுத்தப்படுகிறது. இது விரிவாக விடை எழுதும் வகையைச் சேர்ந்தது (Descriptive) ஆகும். இதில் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் கட்டுரை, கடிதம் எழுதுதல் கட்டுரையைச் சுருக்குதல் என்ற வகையிலான வினாக்கள் இடம்பெறும். இதற்கு 100 மதிப்பெண்கள் ஆகும். போட்டியாளர்கள் ஒவ்வொரு தேர்விலும் தனித்தனியாக தேர்ச்சி பெறவேண்டும். இம்மூன்று தேர்விலுமாக சேர்த்து மொத்தமாக பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதனிலைத் தேர்வுகள் வருகிற ஆகஸ்டு 27-ந் தேதியிலிருந்து தொடங்குகின்றன. மேலும் விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


No comments: