Sunday, 17 July 2016

tnvelaivaaippu | 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளியில் ஆன்லைன் மூலம் நாளை முதல் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம் தமிழக அரசு அறிவிப்பு

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளியில் ஆன்லைன் மூலம் நாளை முதல் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம் தமிழக அரசு அறிவிப்பு
மதிப்பெண் பட்டியல் பெறும் நாளை (திங்கட்கிழமை) முதலே 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளியில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வேலைவாய்ப்பு பதிவு தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவினை மேற்கொள்ளுமாறு ஆணையிட்டார்.
அதன்படி 2011-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதிகளை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக நேரடியாக இத்துறையின் இணையதளத்தில்https://tnvelaivaaippu.gov.in பதிவு செய்து அடையாள அட்டை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது நாளை தொடக்கம் மேலும் 2011, 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆகிய கடந்த 5 ஆண்டுகளில் 10-ம் வகுப்பு கல்வித்தகுதியைத் தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக இணையதளத்தில் 35,53,353 மாணவர்களுக்கு பதிவுகள் செய்யப்பட்டு வேலைவாய்ப்பு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இதனால் மாணவர்களின் போக்குவரத்து செலவு, காலவிரையம், தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்கள் தவிர்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தற்போது 2016-ம் ஆண்டிற்கான 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் 18-7-2016 அன்று வழங்கப்படவுள்ளது. அவ்வாறு வழங்கப்படும் நாளான 18-7-2016 முதல் 1-8-2016 வரை 15 நாட்களுக்கு 18-7-2016 நாளினையே பதிவுமூப்பு தேதியாக அவர்கள் பயின்ற பள்ளியிலேயே பதிவு செய்து வழங்குவதற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வசதி மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்டு தமிழ்நாட்டில் உள்ள 3,893 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவுகள் தற்போது மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, மாணவர்கள் ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று எடுத்து வர வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் தவறாது இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆன்லைன் மூலம் பதிவு மேலும், மெட்ரிக் பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ. பயின்ற மாணவர்களுக்கும் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் https://tnv-e-l-a-iv-a-a-i-ppu.gov.in தங்கள் அளவிலேயே “ஆன்லைன்”-ல் பதிவு செய்யலாம் அல்லது அவர்கள் தங்கள் மாவட்டத்திற்குரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் அணுகி பதிவுச் செய்யலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments: