Monday, 11 July 2016

www.brbnmpl.co.in | பண அச்சகத்தில் வேலை.விண்ணப்பிக்க கடைசி 8-7-2016

பண அச்சகத்தில் வேலை
ரிசர்வ் வங்கியின் துணை அமைப்பு, பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட். பெங்களூரில் செயல்படும் இந்த பண அச்சகத்தில் ‘இண்டஸ்டிரியல் ஒர்க்மேன்’ பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 120 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பொதுப் பிரிவுக்கு 61 பணியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 32 பணியிடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 18 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 9 இடங்களும் உள்ளன.
பண அச்சகத்தில் வேலை விண்ணப்பதாரர்கள் பிரிண்டிங் டிப்ளமோ படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18-7-2016 தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப் பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் ரூ. 200 தேர்வுக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 18-7-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை www.brbnmpl.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


No comments: