Monday, 18 July 2016

www.cpcl.co.in | மத்திய அரசு நிறுவனங்களில் வேலை

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை
பி.சி.பி.எல். எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் சீனியர் மேனேஜர், மேனேஜர், டெபுடி மேனேஜர், சீனியர் ஆபீசர் போன்ற பணிகளுக்கு 52 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கெமிக்கல், பெட்ரோகெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இ.இ.இ., என்விரான்மென்டல் போன்ற பிரிவுகளில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு, பி.காம், எம்.எஸ்சி. சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட பணி அனுபவம் தேவை.
அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு, கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க் கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை www.bc-p-l-o-n-l-i-ne.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 25-7-2016-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சென்னை பெட்ரோலியம் : சி.பி.சி.எல். எனப்படும் சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் என்ஜினீயர், மார்க்கெட்டிங் ஆபீசர், சட்ட அதிகாரி போன்ற பணிகளுக்கு 29 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கெமிக்கல், பெட்ரோலியம், மெக்கானிக்கல், எலக்டரிக்கல், சிவில், மெட்டலர்ஜி உள்ளிட்ட என்ஜினீயரிங் பிரிவுகள், எம்.பி.ஏ., எச்.ஆர்., எல்.எல்.பி. போன்ற படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 31-7-2016 தேதியில் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் www.cpcl.co.in இணையதளத்தில் முழுமையான விவரங்களை பார்த்துவிட்டு, ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-7-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். நகல் விண்ணப்பம் 3-8-2016-க்குள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடைய வேண்டும்.


No comments: