Monday, 18 July 2016

www.mha.nic.in | மத்திய புலனாய்வு பிரிவுகளில் ஒன்றான இன்டலிஜென்ஸ் பீரோ அமைப்பில் 209 செக்யூரிட்டி அசிஸ்டன்ட் (மோட்டார் டிரான்ஸ்போர்ட்) பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

உளவுத் துறையில் 209 பணியிடங்கள்
மத்திய புலனாய்வு பிரிவுகளில் ஒன்றான இன்டலிஜென்ஸ் பீரோ அமைப்பில் 209 செக்யூரிட்டி அசிஸ்டன்ட் (மோட்டார் டிரான்ஸ்போர்ட்) பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், எல்.எம்.வி. லைசென்ஸ் பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு உள்ளது. மோட்டார் சைக்கிள் லைசென்ஸ் பெற்றவர்கள் மற்றும் மோட்டார் மெக்கானிசம் அறிந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் விருப்பத்துக்குரிய கிளையில் உள்ள பணியிடங்களை தேர்வு செய்யலாம். பின்னர் இதை மாற்ற இயலாது. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சிறப்புத்தகுதிகள், லைசென்ஸ், டிரைவிங் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். திறமைத் தேர்வு நடத்தி டிரைவிங் மற்றும் மெக்கானிக் திறமை சோதிக்கப்படும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.mha.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். 6-8-2016-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த 2 நாட்களுக்குள் கட்டணம் செலுத்திவிட வேண்டும். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பார்க்கலாம்.


No comments:

TRB