Monday, 18 July 2016

www.rac.gov.in | ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

என்ஜினீயரிங் படிப்பு தகுதி ஆராய்ச்சியாளர் பணிக்கு 182 காலியிடங்கள்
ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகம் (டி.ஆர்.டி.ஓ. ) அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் துணை அமைப்பான ‘ரெக்ரூட்மென்ட் அசெஸ்மென்ட் சென்டர்’ அமைப்பில் சயின்டிஸ்ட்/என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 182 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியாக எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் பிரிவுக்கு 72 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 47 இடங்களும், மெக்கானிக்கல் பிரிவில் 48 இடங்களும், பிசிக்ஸ் பிரிவில் 8 இடங்களும், ஏரோனாட்டிகல் என்ஜினீயரிங் பிரிவில் 7 இடங்களும் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை கீழே பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 10-4-2016 தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி., ஏரோனாட்டிகல், டெக்ஸ்டைல், கெமிக்கல் போன்ற என்ஜினீயரிங் - டெக்னாலஜி பட்டப் படிப்புகளை படித்தவர்களுக்கு பணி உள்ளது. இவர்கள் என்.இ.டி, கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். தேர்வு செய்யும் முறை: ‘கேட்’ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கட்டணம் : விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 10-8-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.rac.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


No comments:

TRB