Thursday, 11 August 2016

அகில இந்திய பணிகளுக்கான தேர்வுகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதன்மை தேர்வு களில் வெற்றி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் வி.சரோஜா கூறினார்.

அகில இந்திய பணிகள், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுகளில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம்
அகில இந்திய பணிகளுக்கான தேர்வுகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதன்மை தேர்வு களில் வெற்றி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் வி.சரோஜா கூறினார். சட்டப்பேரவையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் கூறியதாவது:
அகில இந்திய பணிகள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை தேர்வுகளில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கிராமங்களில் மிகக் குறைவாக உள்ளன. எனவே, இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட அளவில் சாலை நிகழ்வுகள், தெரு நாடகங்கள் நடத் தப்படும். இதற்காக மாவட்டத் துக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 32 மாவட் டத்துக்கு ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் செலவிடப்படும். தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பும் உரிமைகளும் வழங்கு வதற்காக அனைத்து மாவட்டங் களிலும் ரூ.11 லட்சத்து 20 ஆயிரம் செலவில் வணிக நிறுவனங்களில் உணர்வூட்டும் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், தொண்டு நிறுவனங்களின் உதவியோடு தமிழகத்தில் இயங்கி வரும் 78 ஆரம்பகால பயிற்சி மையங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக ரூ.8 லட்சம் செலவில் ஒருநாள் சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் ரூ.12 லட்சம் செலவில் சிறப்பு சுற்றுலாத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். தொண்டு நிறுவனங்களின் உதவியோடு ஆரம்பகால பயிற்சி மையங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக ஒருநாள் சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

No comments:

TRB