Tuesday, 2 August 2016

நுகர்பொருள் வாணிப கழக முறைப் பொறியாளர், உதவி மேலாளர் மற்றும் உதவியாளர் பதவிக்கான 100 காலிப்பணியிடம் நிரப்பப்படும் சட்டசபையில் அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.

நுகர்பொருள் வாணிப கழக முறைப் பொறியாளர், உதவி மேலாளர் மற்றும் உதவியாளர் பதவிக்கான 100 காலிப்பணியிடம் நிரப்பப்படும் சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக உதவியாளர் பதவிக்கான 100 காலிப்பணியிடம் நிரப்பப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் காமராஜ் அறிவித்தார். நெல் உலர்த்தும் களம் தமிழக சட்டசபையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கான மானியக்கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அதற்கு பதிலளித்து பேசியபோது அந்த துறையின் அமைச்சர் இரா.காமராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:- காவிரி பாசன மாவட்டங்களில், விவசாயிகள் கொண்டுவரும் நெல்லின் ஈரப்பதத்தினைப் கொள்முதல் செய்வதற்கேற்ப உலர்த்துவதற்காக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 50 நெல் உலர்த்தும் களங்கள் ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தி தரப்படும்.
அரியலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. அங்கு தற்போது போதுமான இடவசதி இல்லை. எனவே தலா ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அங்கு புதிய மண்டல அலுவலக கட்டிடங்கள் கட்டப்படும். சென்னையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நடத்தும் 20 அமுதம் பல்பொருள் அங்காடிகளில் நுகர்வோருக்கான வசதிகள், ஒரு கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். ஈரப்பதமானிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை துல்லியமாக எடை போடுவதற்காகவும் மற்றும் கிடங்குகளில் எடை போடுவதற்காகவும் 630 எண்ணிக்கையில் மின்னணு மேடைத்தராசுகள் கொள்முதல் செய்யப்படும். காவிரி பாசன மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டுவரும் நெல்லின் ஈரப்பதத்தினை துல்லியமாக கணக்கிட 145 ஈரப்பதமானிகள் 36 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும். பூச்சியைக் கொல்ல ஒளிப்பொறிகள் நெல், அரிசி, கோதுமை மற்றும் பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் வினியோகத்திற்கு முன்பு சேமித்து வைக்கப்படுகிறது. இவற்றை பூச்சி தாக்குவதால் அவை வீணாகிவிடுகின்றன. எனவே, விஞ்ஞான முறையில் பசுமை சூழலுக்கு சாதகமான முறையில் பூச்சிகளை அழிப்பதற்கு 500 புற ஊதா ஒளிப்பொறிகள் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும். மேலும், கிடங்குகளில் உணவுத் தானியங்களை பூச்சிகளின்றி பராமரிக்க 225 நவீன புற ஊதா ஒளிப்பொறிகள் அமைக்கப்படும். காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் நவீன அரிசி ஆலைகளில் 20 முறைப் பொறியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தரக்கட்டுப்பாடு பிரிவின் செயல்பாட்டை மேம்படுத்த 6 உதவி மேலாளர் (தரக்கட்டுப்பாடு) பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சென்னை தலைமை அலுவலகம் மற்றும் 33 மண்டல அலுவலகங்களிலும் பணியாளர் பற்றாக்குறை இருக்கிறது. உதவியாளர்கள் நிலையில் ஏற்பட்டுள்ள 100 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். பணிக்கொடை அட்டைகள் நுகர்பொருள் வாணிபக் கிடங்குகள் மற்றும் நவீன அரிசி ஆலைகளில் ஓராண்டு பணிமுடித்த ஆயிரத்து 614 சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம், காப்பீட்டுடன் இணைந்த தொழிலாளர் வைப்பு நிதித்தொகை போன்ற பலன்கள் பெறும் வகையில் இளஞ்சிவப்பு நிற அட்டை தரப்படும். அங்கு பத்தாண்டுகள் பணி முடித்த 323 சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வாரவிடுமுறை, அரசு விடுமுறை நாட்களுக்கு கூலி மற்றும் பணிக்கொடை போன்ற பலன்கள் பெறும் வகையில் பச்சைநிற அட்டை வழங்கப்படும். விழிப்புணர்வு கருத்தரங்கு விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவு தானியங்கள், உணவுப்பொருட்கள் மற்றும் விதைகள் ஆகியவற்றின் உயிர்ப்புத்தன்மை கெடாமல் பாதுகாப்பது மற்றும் சேமிப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு, பயிற்சி உபகரணங்கள் வழங்கப்படும். இணையதள சேவை வாயிலாக பொருட்களை மக்கள் வாங்கும் நிலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதினால் ஏமாற்றப்படாமல் இணையவழி வர்த்தகத்தில் ஈடுபடுவது தொடர்பாக பொதுமக்களிடையே நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பன்னிரண்டு மாநகராட்சிகளிலும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: