Tuesday, 23 August 2016

சுதந்திரதின இருவார விழா நிறைவையொட்டி காலை 11 மணிக்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் கூட்டாக தேசிய கீதம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திரதின இருவார விழா நிறைவையொட்டி மாணவ-மாணவிகள் இன்று காலை கூட்டாக தேசிய கீதம் பாட ஏற்பாடு
சுதந்திரதின இருவார விழா நிறைவையொட்டி அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் இன்று காலை கூட்டாக தேசிய கீதம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருவார விழா நாடு முழுவதும் கடந்த 15-ந்தேதி சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய அரசு 9-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை சுதந்திர தின இரு வார விழாவை கொண்டாட ஏற்பாடு செய்தது.
இதையடுத்து அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்கள், சி.பி.எஸ்.இ. துறைகளின் தலைவர், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், இளைய தலைமுறையினரிடையே குறிப்பாக மாணவர்களிடம் சுதந்திர போராட்டம் மற்றும் தேசிய இயக்க உணர்வுகளை மீண்டும் பதியவைக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சி, போட்டிகளை நடத்துமாறு அறிவுறுத்தியது. மேலும் நிறைவு நாளான 23-ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கூட்டாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது. தேசிய கீதம் அதன்படி தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் அனைத்திலும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கூட்டாக தேசிய கீதம் பாட ஏற்பாடு செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள், உதவி கல்வி அதிகாரிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அனைத்து பள்ளிகல்வி இயக்குனரகம், தொடக்க கல்வி இயக்குனரகம், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுதந்திர தின இருவார விழா நிறைவையொட்டி இன்று காலை 11 மணிக்கு மாணவ-மாணவிகள் கூட்டாக தேசிய கீதம் பாடுகின்றனர்.

No comments: