Monday, 1 August 2016

தமிழகத்தில் பி.எட். படிப்புக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (1.8.2016) முதல் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

B.Ed. படிப்புக்கு திங்கள்கிழமை முதல் விண்ணப்பம்: கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு
தமிழகத்தில் பி.எட். படிப்புக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் வழங்கப்படுகின்றன என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன.
இவற்றில் பி.எட். படிப்பில் 1,777 இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் (2016-17) அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர நாளை (திங்கள்கிழமை) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250 மட்டும். அவர்கள் சாதி சான்றிதழ் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்ப படிவங்களை சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் குமாரப்பாளையம், ஒரத்தநாடு, புதுக்கோட்டை, கோவை, வேலூர் காந்தி நகர் ஆகிய இடங்களில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளிலும், சேலம் பேர்லாண்ட்ஸ் ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி, மதுரை தியாகராசர் பர்செப்டார் கல்லூரி, தூத்துக்குடி வஉசி கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி,திருவட்டாறு ஆத்தூர் என்விகேஎஸ்டி கல்வியியல் கல்லூரி ஆகிய இடங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் ஆகஸ்டு மாதம் 9-ம் தேதி வரை தினமும் (சனி, ஞாயிறு உள்பட) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்டு மாதம் 10-ம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னையில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
Announcement regarding Two Year B.Ed. Course Admission for the year 2016-17

B.Ed. admission under Single Window System of Counselling will be conducted by Lady Willingdon Institute of Advanced Study in Education (Autonomous), Chennai-5 for the Government and Government aided colleges. Application forms will be sold from 01.08.2016 to 09.08.2016 on all days including Saturday and Sunday from 10 a.m. to 3 p.m. Cost of the application is Rs.500/- and Rs. 250/- for SC and ST candidates (SC and ST candidates should submit the self attested copy of their community certificate). Amount can be paid in cash or through a demand draft drawn in favour of The Secretary, Tamil Nadu B.Ed. Admission, Chennai – 600 005 from any nationalized or scheduled bank payable at Chennai. Applications should be bought in person only. Demand Draft sent by post requesting to send application by post will not be entertained. Filled in applications should reach The Secretary, Tamil Nadu B.Ed. Admission, Lady Willingdon IASE, Kamarajar Salai, Triplicane, Chennai-5 on or before 10.08.2016, 5 p.m. Applications received after the last date will not be considered. Applications will be sold only in the following centres.

1 INSTITUTE OF ADVANCED STUDY IN EDUCATION, SAIDAPET, CHENNAI. 044-24358351
2 LADY WILLINGDON INSTITUTE OF ADVANCED STUDY IN EDUCATION, TRIPLICANE, CHENNAI. 044-28445531
3 GOVERNMENT COLLEGE OF EDUCATION, KUMARAPALAYAM. 04288-260085
4 GOVERNMENT COLLEGE OF EDUCATION, ORATHANADU. 04372-233258
5 GOVERNMENT COLLEGE OF EDUCATION, PUDUKOTTAI. 04322-221559
6 GOVERNMENT COLLEGE OF EDUCATION FOR WOMEN, COIMBATORE. 0422-2397616
7 GOVERNMENT COLLEGE OF EDUCATION, VELLORE. 0416-2243103
8 LAKSHMI COLLEGE OF EDUCATION, GANDHIGRAM, DINDIGUL DT. 0451-2452337
9 SRI SARADA COLLEGE OF EDUCATION, FOR WOMEN, SALEM. 0427-2447538
10 THIAGARAJAR COLLEGE OF PRECEPTORS, MADURAI. 0452-2311682
11 V.O.C.COLLEGE OF EDUCATION,TUTICORIN. 0461-2310600
12 ST.IGNATIUS COLLEGE OF EDUCATION, (WOMEN) PALAYAMKOTTAI. 0462-2560558
13 N.V.K.S.D.COLLEGE OF EDUCATION, ATTOOR, THIRUVATARU. 04651-282130

No comments:

TRB