Tuesday, 23 August 2016

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வின் மறுமதிப்பீட்டு முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு www.tndge.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்துகொள்ளலாம்.

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வின் மறுமதிப்பீட்டு முடிவு இன்று வெளியீடு
அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு கடந்த ஜூன் மாதம் சிறப்பு துணைத்தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 54,893. இதில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலை இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு www.tndge.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்துகொள்ளலாம். இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.


No comments:

TRB