Thursday, 25 August 2016

பள்ளிக்கல்வி துறை, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 காலாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 காலாண்டு தேர்வுகள் அடுத்த மாதம் 8-ந் தேதி தொடங்குகிறது
பள்ளிக்கல்வி இயக்குனரகம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 காலாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
எஸ்.எஸ்.எல்.சி. செப்டம்பர் 8-ந் தேதி - தமிழ் முதல் தாள், 10-ந் தேதி - தமிழ் 2-வது தாள், 12-ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள், 14-ந் தேதி ஆங்கிலம் 2-ம் தாள், 16-ந் தேதி - கணிதம், 19-ந் தேதி -அறிவியல், 21-ந் தேதி - விருப்ப மொழி, 23-ந் தேதி - சமூக அறிவியல். பிளஸ்-2 செப்டம்பர் 8-ந் தேதி - தமிழ் முதல் தாள், 9-ந் தேதி - தமிழ் 2-வது தாள், 10-ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள், 12-ந் தேதி - ஆங்கிலம் 2-ம் தாள், 14-ந் தேதி - வணிகவியல், மனையியல், புவியியல், 15-ந் தேதி - கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட தொழில் கல்வி, 16-ந் தேதி - உயிரிவேதியியல், இந்திய பண்பாடு, கம்ப்யூட்டர் சயின்ஸ், சிறப்பு தமிழ், புள்ளியியல், தகவல் மேலாண்மை ஆங்கிலம், 19-ந் தேதி - இயற்பியல், பொருளியல் மற்றும் தொழில் தேர்வுகள், 21-ந் தேதி - வேதியியல், கணக்கு பதிவியல், 23-ந் தேதி - உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணிதம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எஸ்எஸ்எல்சி தேர்வு விவரம்: 
செப்.8 (வியாழன்) - மொழித் தாள்-1
செப்.10 (சனி) - மொழித்தாள்-2
செப்.12 (திங்கள்) - ஆங்கிலம் முதல்தாள்
செப்.14 (புதன்) - ஆங்கிலம் 2-ம் தாள்
செப்.16 (வெள்ளி) - கணிதம்
செப்.19 (திங்கள்) - அறிவியல்
செப்.21 (புதன்) - விருப்ப மொழி
செப்.23 (வெள்ளி) - சமூக அறிவியல்

பிளஸ் 2 தேர்வு விவரம்: 
செப்.8 (வியாழன்) - மொழித் தாள்-1
செப்.9 (வெள்ளி) - மொழித் தாள்-2
செப்.10 (சனி) - ஆங்கிலம் முதல் தாள்
செப்.12 (திங்கள்) - ஆங்கிலம் 2-ம் தாள்
செப்.14 (புதன்) - வணிகவியல், மனையியல், புவியியல்
செப்.15 (வியாழன்) - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், அரசியல் அறிவியல், கணக்கியல், தணிக்கையியல் உள்ளிட்ட பாடங்கள்
செப்.16 (வெள்ளி) - இந்திய பண்பாடு, கணினி அறிவியல், உயிரி-வேதியியல், சிறப்புத் தமிழ், புள்ளியியல் உள்ளிட்ட பாடங்கள்
செப்.19 (திங்கள்) - இயற்பியல், பொருளாதாரம், அலுவலக மேலாண்மை உள்ளிட்ட பாடங்கள்
செப்.21 (புதன்) - வேதியியல், கணக்குப்பதிவியல்
செப்.23 (வெள்ளி) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம்


No comments: