Saturday, 13 August 2016

அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 3 பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்கவேண்டும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 3 பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்கவேண்டும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்கவேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்று அண்ணா பல்கலைக்கழகம் மட்டும்தான் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் எம்.ராஜாராம் இருந்தார். அவர் கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார்.
அதன் பிறகு புதிய துணைவேந்தர் தேர்வு செய்யப்படும் வரை துணைவேந்தர் பணிகளை கவனிக்க 3 பேர்கொண்ட அமைப்புக்குழு (கன்வீனர் கமிட்டி) செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்குழுவில் உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திக், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்விக்குழு ஆணையர் மதுமதி, கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் நாராயணசாமி ஆகியோர் உள்ளனர். சென்னை பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பேராசிரியர் ஆர்.தாண்டவன் பணியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார். புதிய துணைவேந்தரை தேர்ந்து எடுக்கும் அதிகாரம் கவர்னரிடம் உள்ளது. ஆனால் துணைவேந்தரை நியமிக்க 3 பேரின் பெயர்கள் மற்றும் விவரத்துடன் சமர்ப்பிக்கவேண்டும். அந்த 3 பேர் பெயர்களை சமர்ப்பிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அமைப்பாளராக பி.என்.வேதநாராயணன் நியமிக்கப்பட்டார். அவர் ஓய்வு பெற்ற கண்காணிப்பு மற்றும் மேம்பாட்டு ஆணையர் ஆவார். உறுப்பினர்களாக எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக அறிவியல் துறை இயக்குனர் டாக்டர் ஆர்.பாலசுப்பிரமணியன், சென்னை பல்கலைக்கழக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் ஆர்.சுரேந்திர பிரசாத் ஆகியோர் உள்ளனர். கல்யாணி மதிவாணன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பேராசிரியர் கல்யாணி மதிவாணன் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார். இதையொட்டி புதிய துணைவேந்தரை தேர்வு செய்வது தொடர்பாக 3 பேர் பெயர்களை சமர்ப்பிக்க தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை. விரைவாக துணைவேந்தர்களை நியமிக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் காந்திராஜ் கூறியதாவது:- கல்லூரி கல்வி இயக்குனர் 3 பல்கலைக்கழகத்திலும் கன்வீனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த கோப்பிலும் கையெழுத்து வாங்கவேண்டும் என்றால் கன்வீனர் குழுவில் உள்ள அந்த 3 பேர்களிடமும் பெறவேண்டும். இதனால் பல கோப்புகள் கையெழுத்து பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. துணைவேந்தர்கள் இருந்தால் அவர்களுக்கு இந்த பல்கலைக்கழகத்தை எப்படி கொண்டு செல்லவேண்டும் என்று நீண்டகால திட்டம் வைத்திருப்பார்கள். எனவே அண்ணாபல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் புதிதாக துணைவேந்தர்களை அரசு நியமிக்கவேண்டும். கல்லூரி கல்வி இயக்குனர் ஆக கடந்த 4 வருடங்களாக யாரையும் நியமிக்கவில்லை. மாறாக பொறுப்பு இயக்குனர்கள்தான் இருந்திருக்கிறார்கள். எனவே கல்லூரி கல்வி இயக்குனரை நியமிக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

TRB